மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்துப் போராட்டம்
நாமக்கல், ஜூலை 9- ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து விவசா யிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாதர், வாலிபர், மாணவர் சங்கத்தி னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் மக்கள், விவசாய தொழிலாளர், மாணவர் விரோத கொள்கைகளைக் கண்டித்து, புத னன்று மறியல் நடைபெற்றது. நாமக் கல், பள்ளிபாளையம் காவிரி ஆர்எஸ் பகுதியில் நடைபெற்ற ரயில் மறிய லுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். தண்டவாளத் தில் அமர்ந்து முழக்கங்களை எழுப் பிய 100க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். ராசி புரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, மலை வாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலா ளர் கே.சின்னசாமி தலைமை வகித் தார். இதில் இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் கோ.அரவிந்த சாமி, மாநில துணைத்தலைவர் தே.சரவணன், மாவட்டச் செயலாளர் மு.தங்கராஜ், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.ராணி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் சி.துரைசாமி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். நாமக்கல்லில் நடைபெற்ற ரயில் மறியலுக்கு வாலி பர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.கே.சிவச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். சேலம் தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம் சார்பில் வாழப்பாடி, மேட்டூர், மேச்சேரி, பெத்தநாயக்கன் பாளையம், ஓமலூர் ஆகிய பகுதிக ளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. இதில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்டத் தலைவர் அன்பழகன், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் டி.பெருமா, பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.அரி யாக்கவுண்டர், விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். கே.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற மறியலுக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபா லன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரி முத்து, மாதர் சங்க மாவட்டத் தலை வர் ஏ.ஜெயா, வாலிபர் சங்க மாவட் டத் தலைவர் மா.குரளரசன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் உட்பட திரளானோர் கலந்து கொண் டனர். அரூரில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார் தலைமையில் மறியல் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.முத்து, கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க மாநிலச் செயலா ளர் இ.கே.முருகன் ஆகியோர் பங் கேற்றனர். பாப்பிரெட்டிப்பட்டியில் விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் சி.வஞ்சி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா, மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் அம்பு ரோஸ், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தீர்த்தகிரி உட்பட பலர் கலந்து கொண்டனர். நல்லம்பள்ளியில் நடைபெற்ற மறியலுக்கு விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் முனியப்பன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ. அருச்சுனன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.என்.மல் லையன் உட்பட பலர் கலந்து கொண் டனர். பாலக்கோடில் விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் ஜி.நக்கீரன் தலைமையில் நடைபெற்ற மறிய லில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் உட் பட பலர் கலந்து கொண்டனர். பென் னாகரத்தில் நடைபெற்ற மறியலில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் எம்.குமார், விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டப் பொருளாளர் சிவா ஆகியோர் கலந்து கொண்ட னர். பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற மறியலில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் வே.விஸ்வநாதன், வாலிபர் சங்க மாவட்டப் பொருளா ளர் சிலம்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.