மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
மேட்டுப்பாளையம், ஜூலை 17 – மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 876 மனுக்கள் குவிந்தது. பொது மக்கள் ஆர்வத்துடன் இந்த முகாமில் பங்கேற்று நம்பிக் கையோடு மனுக்களை வழங்கினர். கோவை மாவட்டம், மேட் டுப்பாளையம் நகராட்சிக் குட்பட்ட 2,3 மற்றும்13 வது வார்டுகளில் வசிக்கும் மக் களுக்காக வியாழனன்று, உங்களுடன் ஸ்டாலின் முகாம் சிறுமுகை சாலை யில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது. இதில் நகர் மன்ற துணை தலைவர் அருள்வடிவு முனுசாமி,கமி ஷன் அமுதா,வட்டாட்சியர் ராமராஜ் ஆகியோர் முன் னிலை வகித்தனர். முகாமில் மகளிர் உரி மைத் தொகை கோரி 252 மனுக்கள், தமிழக அரசின் இலவச காப்பீடு கோரி 15 உள்ளிட்ட பல்வேறு சேவை கள் தொடர்பாக மொத்தமாக 876 மனுக்கள் பொதுமக் களிடமிருந்து பெறப்பட்டன. பல்வேறு சேவைகள் தொடர்பாக அளிக்கப்பட்ட 24 மனுக்களுக்கு உடனடி யாக தீர்வு காணப்பட்டு அதற்குரிய சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இம்முகா மில் நகராட்சி கவுன்சிலர்கள் உமாமகேஸ்வரி, சங்கீதா உள்ளிட்ட முக்கிய நிர்வாகி கள் மற்றும் பல்வேறு அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். இம்முகாமில் சுகாதார துறை சார்பில் கார மடை வட்டார மருத்துவ அலு வலர் சுதாகர் தலைமையில் சுகாதார மேற்பார்வையா ளர்(பொறுப்பு)சியாமளா உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.