tamilnadu

img

மு.க.ஸ்டாலின் சென்று ஆறுதல் தெரிவித்தார்

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு செவ்வாயன்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். துடியலூரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற ஸ்டாலின் சிறுமியின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்களின் வாழ்நிலை குறித்து கேட்டறிந்து ஆறுதலையும், ஆதரவையும் தெரிவித்தார். உடன், நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா உள்ளிட்ட திமுக தலைவர்கள் உடனிருந்தனர்.