திருவனந்தபுரம் கேரளம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப் பட்ட ஆளுநர்கள் வியாழக் கிழமை அன்று பதவியேற்றுக் கொண்டனர். கேரளம், மணிப்பூர், பீகார், மிசோரம், ஒடிசா உள்பட 5 மாநி லங்களின் ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு கடந்த டிச., 24ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பீகார் ஆளுநராக வும், பீகார் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லே கர் கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டனர். அதே போல அசாம் ஆளுநர் லஷ்மண் பிரசாத் ஆச்சாரியா மணிப்பூர் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலை யில், மணிப்பூர் மாநில ஆளுந ராக அஜய் பல்லா நியமிக்கப் பட்டார். மிசோரம் ஆளுநராக இருந்த ஹரி பாபு கம்பம்பாடி, ஒடிசா மாநில ஆளுநராகவும், மிசோரம் ஆளுநராக முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி வி.கே.சிங்கும் நியமிக்கப் பட்டனர். கேரளம் இந்நிலையில், கேரள மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வ நாத் அர்லேகர் வியாழக்கிழமை காலை பதவியேற்றுக் கொண் டார். திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடை பெற்ற விழாவில் கேரள உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி நிதின் மதுகர் ஜம்தார் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநில அமைச்சர்கள் விழாவில் பங்கேற்றனர். பீகார் பீகார் மாநில ஆளுநராக ஆரிப் முகமது கான் ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை அன்று பதவியேற்றார். பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வினோத் சந்திரன், ஆரிப் கானுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முதல்வர் நிதிஷ் குமார், எதிர்க் கட்சித் தலைவர் தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.