உச்சநீதிமன்றம் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை விரைந்து வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு ஓராண்டு ஆகிவிட்டது. இந்த ஒரு ஆண்டு போதுமானது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.
நான் மகாராஷ்டிராவில் இருந்து வெளியேறி தென் மாநிலங்களுக்கு செல்ல இருக்கிறேன். பாலிவுட்டை (இந்தி திரையுலகம்) சேர்ந்தவர்களால் நான் மிகவும் ஏமாற்றத்தையும் வெறுப்பையும் அடைந்துள்ளேன். அவர்களின் மனநிலை என்னை வெறுப்படையச் செய்துள்ளது.
மோடியின் ஆட்சியில் பட்டியலினத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் சாசனத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.
தனது அமைச்சரவையின் சக பணியாளரை அமெரிக்காவுக்கு அனுப்பி, தனக்கான அழைப்பிதழை (அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்கும் விழா) கொண்டு வரவேண்டும்; இல்லையேல் வேலையை இழக்க நேரிடும் என மிரட்டியுள்ளார் மோடி. ஆனால் மோடியை தற்போது அழைக்கும் மனநிலையில் டொனால்டு டிரம்ப் இல்லை என்பதால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2024ஆம் ஆண்டில் 2.55 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ள னர். உண்டியலில் 1,365 கோடி ரூபாய் காணிக்கை யாக செலுத்தியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் டிசம்பர் மாதத்தில் 3,805 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனை நிகழ்ந்துள்ளது. குறிப்பாக டிசம்பர் 23 முதல் 31 வரை 1,700 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் குடும்பப் பிரச்சனை காரணமாக சுந்தர் கர்மாலி (27) என்ற இளைஞர் கிணற்றில் விழுந்து தற்கொலை க்கு முயன்றார். சுந்தர் மற்றும் அவரைக் காப்பாற்றச் சென்ற 4 பேரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.