states

img

அமித் ஷாவுக்கு நெருக்கமான அஜய் பல்லா ஆளுநராக நியமனம்

இம்பால் குக்கி - மெய்டெய் இனக் குழுவுக்கு இடையேயான மோதல் சம்பவங்கள் கார ணமாக வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 20  மாதங்களாக வன்முறை சம்பவங்க ளால் பற்றி எரிந்து வருகிறது. இந்த வன்முறைக்கு 260 பேர் பலியாகி யுள்ளனர். பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதி களாக வாழ்ந்து உள்ளனர்.  குக்கி, நாகா, ஸோ உள்ளிட்ட பழங்குடி மக்களை மலைப் பகுதி யில் இருந்து துரத்த, அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்கு தல் நடத்தும் பணி தீவிரமடைந்துள் ளது. இத்தகைய சூழலில் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் பல்லா மூலம் மணிப்பூர் மாநி லத்தின் வன்முறை சம்பவங்கள் மிக மோசமான நிலைக்குச் செல் லும் என அரசியல் வல்லுநர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அமித் ஷா - அஜய் பல்லா அசாம் ஆளுநர் லஷ்மண் பிர சாத் ஆச்சாரியா மணிப்பூர் ஆளு நராகவும் (கூடுதல் பொறுப்பாக) பணியாற்றி வந்தார். இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக அஜய் பல்லா நிய மிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர்  திரவுபதி முர்மு டிசம்பர் 24ஆம் தேதி அறிவித்தார்.  1984 ஐஏஎஸ் பேட்ச் அதிகாரி யான அஜய் பல்லா 2019 முதல் 2024ஆம் ஆண்டு வரை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் துறை செயலாளராக பணியாற்றி வந்தார். அதாவது இந்திய நாட்டின் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பொறுப்புக ளை அமித் ஷாவின் உத்தரவின் பேரில் அஜய் பல்லா செயல்படுத்தி வந்தவர். துறை சார்ந்த பணிகளை தாண்டி அமித் ஷாவிற்கு அஜய் பல்லா மிக நெருக்கமானவர் என்ற நிலையில், 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அஜய் பல்லா தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற 5 மாதங்களிலேயே  மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் அஜய் பல்லா.  அமித் ஷாவிற்கு மிக நெருக்க மானவர் என்பதால் இனி மணிப்பூ ரில் வன்முறைச் சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிகரிக்கும் என்றும், மலைப் பகுதியில் வாழும் குக்கி, நாகா, ஸோ உள் ளிட்ட பழங்குடி மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் கொடூரத் தாக்குதல் நடத்த வாய்ப் புள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பைரேன் சிங்கிற்கும்  அஜய் பல்லாவிற்கும் மோதல் வெடிக்க வாய்ப்பு

மணிப்பூரில் உள்ள மலைப் பகுதிகள் வளமிக்கவை. நிலக்கரி சுரங்கத்திற்காக மலைப்பகுதியை அதானிக்கு தாரை வார்க்க மோடி அரசு குறியாக உள்ளது. ஆனால் மலைப்பகுதிகளில் பழங்குடி யின மக்கள் தவிர வேறு யாரும் நிலங்கள் வாங்க முடியாது என்ற பாரம்பரியம் உள்ளது. பழங்குடி மக்களை துரத்திவிட்டால் மலைப் பகுதி நிலத்தை அதானிக்கு கொடுத்து விடலாம் என கணக்குப் போட்டு மோடி மற்றும் மணிப்பூர் பாஜக அரசுகள் மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்களை தூண்டி வருகின்றன. மலைப்பகுதிகளில் பழங்குடி யின மக்களை விரட்டும் பணியை சரியாக மேற்கொள்ளாததால் மணிப்பூர் பாஜக முதல்வர் பைரேன் சிங்கை ஓரங்கட்டவே தனக்கு நெருக்கமான அஜய் பல்லாவை ஆளுநராக கள மிறக்கியுள்ளார் அமித் ஷா. பாது காப்புப் படையினருக்கு வியூக மான உத்தரவுகளை பிறப்பித்து மலைப்பகுதியில் பழங்குடி மக்கள் மீதான தாக்குதலை தீவிரப் படுத்தி, அவர்களை அங்கு இருந்து துரத்துவது தான் அஜய் பல்லா வின் வேலை. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அஜய் பல்லா பொறுப்பேற்றவுடன் முதல்வர் பைரேன் சிங்கின் அதி காரங்கள் குறைக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் பைரேன் சிங்கிற்கும் அஜய் பல்லாவிற்கும் மோதல் வெடிக்க வாய்ப்பு உள்ளது என வடகிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பழங்குடியின மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் “கோடி மீடியா”

மணிப்பூரில் குக்கி - மெய்டெய் இனக்குழுவுக்கு இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில் குக்கி மக்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். பாஜகவின் கைப்பாவை யான “கோடி மீடியா” ஊடகங்கள் டிசம்பர் மாத இறுதியில் இருந்து குக்கி பழங்குடியின மக்கள் எனக் கூறுவதை தவிர்த்து, மலைப்பகுதி தீவிரவாதி கள் என செய்தி வெளியிட்டு வருகின்றன. பழங்குடியின மக்களை தீவிரவா திகளாக சித்தரிக்கும் “கோடி மீடியாக்களின்” செயல்பாட்டிற்கு நாடு முழு வதும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.