லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் அருகே அஸ்லத்புரா வைச் சேர்ந்தவர் ஷாஹிதீன் குரேஷி (37). வேலைக்குச் சென்று வீடு திரும்பும் பொழுது 4 பேர் கொண்ட பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த இந்துத்துவா குண்டர்கள் குரேஷியை வழிமறித்து விசாரித்துள்ளனர். குரேஷி முஸ்லிம் என்பது தெரிந்தவுடன்,”பசுவை கடத்தி விற்பனை செய்வது நீ தானா?” என கேள்வி எழுப்பி கற்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தி யுள்ளனர். இந்த தாக்குதலில் குரேஷி பலத்த காயம டைந்தார். தகவலறிந்த காவல்துறை குரேஷியை மருத்துவமனையில் அனுமதித்தது. ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். குரேஷியின் சகோதரர் ஷாஜாத்தின் புகாரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றது. இந்துத்துவா குண்டர்களின் தாக்குதலில் உயிரிழந்த ஷாஹிதீன் குரேஷிக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன. குரேஷியை படுகொலை செய்த இந்துத்துவா குண்டர்கள் அஸ்லத்புராவைச் சேர்ந்தவர்கள் என் றாலும், இன்னும் ஒருவர் கூட கைது செய்யப்பட வில்லை. காவல்துறையினர் இந்துத்துவா குண் டர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக மொரா தாபாத் முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர்.