மனுஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்ட நால்வர்ண அமைப்பின் இந்துத்துவ பெயர்தான் சனா தனதர்மம் என்று மார் க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் தெரி வித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மலப்புரம் மாவட்ட மாநாட்டின் ஒரு பகுதியாக தானூரில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறிய தாவது: முதல்வர் பினராயி விஜயனின் சிவகிரி உரையை கேரளாவும் இந்தியா வும் ஏற்றுக்கொண்டுள்ளது. எதிர்க் கட்சித் தலைவர் வி.டி.சதீசன் இந்துத்துவ மயமாக்கலை மூடிமறைக்கப் பார்க்கி றார். எதிர்க்கட்சித் தலைவர் சொல்வது போல், சனாதனதர்மம் என்பது வேதம், உபநிடதங்கள், தத்வமசி ஆகியவற்றின் கலவை அல்ல. இதெல்லாம் வெறும் தூசு. சங்பரிவாரம் நால்வர்ண அமைப் பின் அடிப்படையிலான அரசியல மைப்பை விரும்புகிறது. இதற்காக அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய 430 தொகுதிகளையா வது வெல்ல வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. சனாதனதர்மம் என்ற பெயரில் இந்தியாவை மதவாத நாடாக ஆக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் முயற்சி. இதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்ப வேண்டும். வகுப்புவாதம் தங்க ளுக்குள் நடத்தும் மோதல்களில் யாரும் வெற்றி பெறுவதும் இல்லை அல்லது தோற்பதும் இல்லை. இரு தரப்பும் வலு வடையவே செய்யும். இரண்டு வகுப்பு வாதமும் மக்களை பிரிக்க முயல்கின் றன. ஜமாத்-இ-இஸ்லாமி, எஸ்.டி.பி.ஐ-யை எதிர்க்காமல் சங் பரிவாரை எதிர்த்துப் போராடுவதும், சங் பரிவா ரை எதிர்க்காமல் சிறுபான்மை வகுப்பு வாதத்தை எதிர்ப்பதும் பலனளிக்காது. சூரல்மலை பேரழிவு (நிலச்சரிவு) மிகவும் கடுமையானது என்பதை ஒன்றிய அரசு வாய்மொழியாக ஏற்றுக்கொண்டா லும், உதவிகள் ஏதும் வழங்கவில்லை. கேரள அரசு அந்த மக்களின் முழு வாழ்க்கையையும் கைதூக்கிவிடத் தேவையான மறுவாழ்வு அளிக்க முயற்சிக்கிறது. இதற்காக அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழு உள்ளது என்றார் எம்.வி.கோவிந்தன்.