tamilnadu

img

இறப்புக்கு பின்னும் வாழும் சீதாராம் யெச்சூரி

இறப்புக்கு பின்னும் வாழும் சீதாராம் யெச்சூரி

நாளை காலை எட்டு மணிக்கு,  மருத்துவக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும்  உடற்கூறியல் துறை அரங்கில் கூட  வேண்டும் என்ற அறிவிப்பு பேரா சிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி யது. இந்த வகுப்பில் கல்லூரியின் முதல்வர் பங்கேற்கிறார் என்பதே அதற்குக் காரணம். காலை ஏழு மணிக்கே அரங்கம்  தயாரானது. ஒரு திருமண மண்ட பத்தை மிஞ்சும் அளவிலான பெரிய, குளிரூட்டப்பட்ட அந்த அறையின் மையப்பகுதியில், ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு உடல் துணியால் மூடப் பட்டிருந்தது. முதல்வர் உள்ளே  நுழைந்ததும், உடலைச் சுற்றி  நின்றிருந்த நாற்பது மாணவர்க ளும் பத்து பேராசிரியர்களும் கவன மாக இருந்தனர். முதல்வர் பேசத் தொடங்கி னார். “இந்த உடல், நம் மருத்து வமனையிலிருந்து அனுப்பிய போது இருந்த அதே நிலையில் பாதுகாப்பாகத் திருப்பித் தந்த தற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். வழக்கமாக, நாம் ஆய்வு செய்யும் உடல்களிலிருந்து வேறுபட்டது இந்த உடல். இவர் உயிரோடு இருந்தபோது நம் மீதும், நம் மருத்துவமனையின் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத் திருந்தவர். இறந்துபோன இவ ருக்கு நம் மருத்துவர்கள் தலை வணங்கி மரியாதை செலுத்தி யுள்ளனர். வழக்கமாக நாம் உடலின் பாகங்களைப் பிரித்துப் பார்ப் போம். ஆனால், 72 ஆண்டுகள் வாழ்ந்த இந்த மனிதரின் செயல் பாடுகளுடன் இணைத்துப் பார்த்து  மருத்துவ மாணவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். முத லில், இவரது முகத்தைப் பாருங் கள். லட்சக்கணக்கான மக்களால்  அறியப்பட்ட முகம். எப்போதும் புன்னகை பூத்த முகம். அடுத்ததாக, இவரது கண்கள். பல நாட்டு மேதைகளையும், இந் தியாவின் தலைசிறந்த ஆளுமை களையும், கடைக்கோடி உழைப் பாளிகளையும் தரிசித்த கண்கள். காஷ்மீர் முதல் குமரி வரை இந்தியாவையும், உலகத்தின் பல  நாடுகளையும் பார்த்த கண்கள்.  இந்தக் கண்கள் படித்த புத்தகங் களின் எண்ணிக்கை கணக் கிலடங்காதது. எவ்வளவு படிக்க வேண்டும், நாம் படித்தது எவ் வளவு என்று உங்கள் சிந்தனை சிறகடிக்கும். இவரது வாய். பேசு வது எல்லோருக்கும் தெரி யும், ஆனால் எதை, எப்படிப் பேச வேண்டும் என்பதற்கு இவரது பேச்சு ஒரு உதாரணம். இதிகாசங்கள், இலக் கியம், அறிவியல், பொருளாதா ரம், உலக வரலாறு என எந்தத் தலைப்பிலும் குழப்பமில்லாமல் தெளிவான உரைகளை வழங்கு வார். நாடாளுமன்றத்தில் இவர் பேசத் தொடங்கினால் அவைத் தலைவர் முதல் உறுப்பினர் வரை அனைவரும் கூர்ந்து கவனிப்பார்கள். இவரது மூளையை ஆய்வு செய் தால் அதிர்ந்து போவீர்கள். நம்  நினைவக அட்டைகளின் அளவுக ளான KB, MB, GB, TB என  பல அளவுகளைப் பார்த்திருக்கி றோம். ஆனால், இவருடைய மூளையில் எவ்வளவு தகவல்கள் பதிவாகியிருக்கின்றன, இவரது நினைவாற்றல் எவ்வளவு, புதிய தாக எப்படிச் சிந்திக்கிறார் என் பதை ஆராய்ந்தால், அது TB அள வையும் மிஞ்சும். அதே அளவு மூளைதான் நமக்கும் இருக்கிறது. நம்பிக்கை இருந்தால் இவரைப் போல நம்மாலும் சாதிக்க முடி யும். இவரது கால்கள். அரசுத் துறை யில், சர்வதேச அளவில், அல்லது  தனியார் துறையில் பணியாற்றியி ருந்தால், இவர் அளவிட முடியாத செல்வம் ஈட்டியிருக்கலாம். ஆனால், இவருடைய கால்கள் ஏழை எளிய மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும் பய ணித்தன. சமூகக் கருத்துக்களைப் பரப்பினார். ஒருமுறை, காஷ் மீரில் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த தன்  நண்பனைப் பார்க்க தடை பல  கடந்து சென்றார். அங்கே ராணு வம் கைது செய்தபோது, பல மணி  நேரப் போராட்டத்துக்குப் பிறகு ஒரு  துண்டுச்சீட்டில் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டுத் திரும்பினார். உங்கள் கால்களும் இவ ரைப் போலப் பய ணிக்குமா? யோசித்துப் பாருங்கள். இவரது கைகள்.  எத்தனை புத்தகங்கள், கட்டுரை கள் எழுதியிருக்கின்றன. இப் போதும்கூட அவரது ஐந்து விரல் களும் ஒன்றாக இணைந்து, வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்காகவும், அனைவருக் கும் அனைத்தும் கிடைக்கவும், ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்துவதற்காகவும் முஷ்டியை உயர்த்துவதற்காகக் காத்திருக்கின்றன. இறுதியாக மாணவர்களே, உங்களின் எதிர்கால ஆய்வுக ளில், இவரைப் போன்ற அறிவுஜீவி கள் தேசத்துக்குத் தேவை என்ப தால் உயிர்ப்பித்து தருவீர் களா?” முதல்வர் பேசப் பேச, மாணவர் கள் மற்றும் பேராசிரியர்களின் கண் களில் அருவியாய் வழிந்த கண் ணீர், என் கண்களிலும் வழிந்தது. அந்தக் கனவிலிருந்து நான் துள்ளி எழுந்தேன். உயிருடன் இருக்கும்போது ரத்த தானமும், இறந்தபிறகு உடல் தானமும் செய்வோம். ஆர் வேலுசாமி கோவை செப்.12 சீதாராம் யெச்சூரி நினைவு  நாளில் உடல் தானம் செய்வோம்