tamilnadu

img

அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்திடுக வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்திடுக வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, செப்.3- வருவாய்த்துறையின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்க ளுக்கு தீர்வு காண போதிய கால அவகா சம் வழங்க வேண்டும். சிறப்பு பணிப்பாது காப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும். காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். வருவாய்த்துறையின் அடிப்படை கட்டமைப் புகளை வலுப்படுத்த வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்ச வரம்பு 5 சதவிகிதம் என குறைக்கப்பட்டுள் ளதை ரத்து செய்து, ஏற்கனவே இருந்ததைப் போன்று 25 சதவிகிதமாக நிர்ணயம் செய்ய  வேண்டும் உள்ளிட்ட 9 ஆம்ச கோரிக்கை களை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவ லர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்  வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்ட மைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.துரைவேல் தலைமை வகித்தார். இதில் ஒருங்கிணைப்பாளர்கள் கு.அகிலன் அமிர்த ராஜ், சி.பிரபு, ஆர்.ரங்கன்,  நிதி காப்பாளர் இல.பகவதி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் ம.சிவன், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட் டச் செயலாளர் கணேசன், கிராம வருவாய் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சிவசங்க ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், மாவட்ட துணைத்தலைவர் டி.ராஜா நன்றி கூறினார்.