நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத வருவாய்த்துறை
விதொச தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி, ஜூலை 8- இலவச மனைபட்டா வழங்க வலியுறுத்தும் நீதிமன்ற உத் தரவை அமல்படுத்தாத வருவாய்த் துறையைக் கண்டித்து விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைமை யில் போயர் இன மக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மாம்பட்டி ஊராட்சிக்குட் பட்ட இட்லப்பட்டி கிராமத்தில் 250க் கும் மேற்பட்ட மிகவும் பிற்படுத்தப் பட்ட போயர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். கல்லுடைப்பது, கிணறு வெட் டும் பணி, தினக்கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வரு கின்றனர். இக்கிராமத்தில் சர்வே எண்:12/1இல் 64 சென்ட் நிலம் உள் ளது. இந்த நிலத்தில் வீடு இல்லா தவர்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரு வாய்த்துறை அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும், பல அதி காரிகளிடம் முறையிட்டும் பட்டா வழங்கப்படவில்லை. இதைய டுத்து இக்கிராமத்தை சேர்ந்த 21 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ் வழக்கை விசாரித்த நீதிமன்றம், 21 நபர்களுக்கும் மனைபட்டா வழங் கலாம் என தீர்பபு வழங்கியது. இத்தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 9 நபர் களுக்கு மட்டும் மனைப்பட்டா வரு வாய்த்துறை மூலம் வழங்கப்பட் டது. ஆனால், பட்டாவுக்கான இடத்தை கடந்த 4 ஆண்டுகளாகி யும் அளந்து கொடுக்கவில்லை. இந்நிலையில், மீதமுள்ள நபர்க ளுக்கு மனைபட்டா கேட்டு அதி காரிகளிடம் தொடர்ந்து மனு கொடுக்கப்பட்டது. மேலும், நீதி மன்ற தீர்ப்பை வருவாய்த்துறை அமல்படுத்தாததை அடுத்து மீண் டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பயனாளிகள் வழக்கு தொடுத்த னர். இதனை விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே வழங்கப்பட்ட 9 இல வச மனைபட்டாவுக்கான இடத்தை இரண்டு மாதத்திற்குள் அளந்து கொடுக்க வேண்டும். மீதமுள்ள நபர்களுக்கு இலவச மனைபட்டா வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் பிறகும் வருவாய்த்துறை மனைபட்டாவுக் கான இடத்தை அளந்து கொடுக்க வும், மீதமுள்ளவர்களுக்கு பட்டா வழங்கவும் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இச்சூழலில் அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர், நீதிமன்றம் இலவச மனைபட்டா வழங்க வேண்டிய இடத்தை ஆக் கிரமிப்பு செய்ய முயற்சி செய்து வருகிறார். அவருக்கு துணையாக அரூர் வட்டம் வருவாய்த்துறை செயல்பட்டு வருகிறது. எனவே, தனிநபருக்கு துணை போவதை கைவிட்டு நீதிமன்ற உத்தரவுபடி, இட்லப்பட்டி மக்களுக்கு இலவச மனைபட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தி, அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் அப்பகுதி பொது மக்கள் செவ்வாயன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். அரூர் வட்டாட் சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தின் வட்டச் செயலாளர் கே.கும ரேசன் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் எம்.முத்து, வட்டத் தலைவர் தீ.ஜடையாண்டி, நிர்வாகிகள் சொக்கலிங்கம், சி. வேலாயுதம், கே.தங்கராஜ், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.குமார் உட் பட பலர் கலந்து கொண்டனர்.