tamilnadu

img

ஆட்சி மாற்றம் நிகழட்டும் - தமிழகம் நிமிரட்டும்... அதிமுக அரசை அகற்றுவோம்.... பாஜகவை நிராகரிப்போம்... டிசம்பர் 25 முதல் 31 வரை தமிழகம் முழுவதும் சிபிஎம் மக்கள் சந்திப்பு இயக்கம்....

கோயமுத்தூர்:
அதிமுக அரசை அகற்றுவோம், பாஜகவை நிராகரிப்போம்.தமிழகம் நிமிர ஆட்சிமாற்றம் நிகழட்டும் என்கிற முழக்கத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் பத்தாயிரம் குழுக்கள் வீடுவீடாக மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்த உள்ள
தாக கோவையில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக சிபிஎம் கோவைமாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில்,  மத்திய  பாஜகவின்  ஆட்சியில்  மதவெறி  எனும்  நச்சரவம்  படமெடுத்து ஆடுகிறது. அம்பானி,  அதானி  போன்ற  கார்ப்பரேட்  முதலாளிகளுக்கு  கைகட்டி  சேவகம்  செய்கிற மோடிஅரசு வாக்களித்த மக்களை வஞ்சிக்கிறது. உதாரணமாக, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு,  கோவிட் -19  பாதிப்பினால்  ஏற்பட்ட  வேலையிழப்பு, தொழில்  முடக்கம்  என  தொடர்  தாக்குதலால்  மக்கள்  வாழ  வழியின்றி  தத்தளிக்கிறார்கள்.  வேளாண்துறையை  கார்ப்பரேட்டுகளுக்கு  கைமாற்றி  விடுவதற்காக  மோடி  அரசு  கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் மின்சார திருத்த சட்டம்- 2020 ஆகியவற்றை  எதிர்த்து  தலைநகர்  தில்லியில்  விவசாயிகள்  25  நாட்களுக்கும்  மேலாக  கடும்  குளிரில்  வீரம்  செறிந்த  போராட்டத்தை  நடத்தி வருகின்றனர். 

இலவச மின்சாரம் ரத்தாகும்
இந்த  சட்டம்  நடைமுறைப் படுத்தப்பட்டால்,  வேளாண்  விளைபொருட்களுக்கு  குறைந்தபட்ச  ஆதரவுவிலை  இல்லாமல்  போகும்,  அரசு கொள்முதல்  கைவிடப்படும்,  நியாய  விலைக்கடைகள்  மூடப்படும். ஒப்பந்த முறைவிவசாயம் என்ற பெயரில் விவசாயிகளிடமிருந்து அவர்களதுவிளைநிலங்கள் பறிக்கப் படும். கார்ப்பரேட் முதலாளிகள்  அடிமாட்டு  விலைக்கு  விளைபொருளை  வாங்கி பதுக்கிவைத்து கொள்ளையடிப்பார்கள். செயற்கையாக  பஞ்சங்கள்  உருவாக்கப்படும்,  பட்டினிச்சாவுகள் தொடர்கதையாகும்.  இலவச  மின்சாரத்தையும்  இல்லாமல்  செய்ய  சட்டத்திருத்தம்  வர  உள்ளது. அதேபோல, தொழி லாளர்கள் போராடிப்பெற்ற உரிமைகளையும் சலுகைகளையும் பறிக்கும் வகையில் முதலாளிகளின் முன்மொழிவுகளை ஏற்று தொழிலாளர் நலச்சட்டங்களையும் முதலாளிகள் நலச்சட்டங்களாக மாற்றி வருகிறது மோடிஅரசு. எட்டுமணி நேரவேலை, நிரந்தரப்பணி, சட்டப்பூர்வ சலுகைகள் அனைத்தும் முதலாளிகளின் ருப்பத்துக்கேற்ப முடக்கப்படுகின்றன. புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் கல்வித்துறையை மதவெறிமயமாகவும், வணிகமயமாகவும் மாற்றுவது,  கல்வியில்  மாநிலங்களின்  உரிமையை  மறுப்பது,  தாழ்த்தப்பட்ட,  பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட

===தொடர்ச்சி 3-ம் பக்கம்===

;