தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு தருமபுரியில் வரவேற்புக்குழு அமைப்பு
தருமபுரி, ஜூலை 4- தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட மாநாட்டை யொட்டி, தருமபுரியில் வரவேற்புகுழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தருமபுரி மாவட்ட 5 ஆவது மாநாடு நடத்துவதற்கான வரவேற்புகுழு அமைப்புக்கூட்டம் தருமபுரியில் வெள்ளியன்று நடைபெற் றது. அமைப்பின் மாவட்டத் தலைவர் பி.ஜெயராமன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.நாகராசன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்து, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா, பண்ணியாண்டிகள் சங்க மாநிலத் தலைவர் டி.ஜி.சம்பத், எல்ஐசி கோட்ட இணைச்செயலாளர் ஏ.மாதேஸ்வரன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் குரளர சன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜூலை 26 ஆம் தேதியன்று தருமபுரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது. தருமபுரி பூபதி மண்ட பத்தில் பிரதிநிதிகள் மாநாடும், பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பொதுக்கூட்டமும் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், மாநாட்டை சிறப்பாக நடத்துவதற் கான வரவேற்புக்குழு தலைவராக டி.ராமலிங்கம், செயலாள ராக ஏ.சேகர், பொருளாளராக கே.கோவிந்தசாமி உட்பட 50 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.