tamilnadu

img

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு எதிரான தீர்ப்புகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மத்தியசென்னை மாநாட்டில் அறிவிப்பு

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு எதிரான  தீர்ப்புகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மத்தியசென்னை மாநாட்டில் அறிவிப்பு

சென்னை, ஜூலை 27 - சுமைப்பணி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் நீதிமன்ற தீர்ப்பு களை எதிர்த்து ஆக.21 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சென்னை பெருநகர சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மத்திய சென்னை 8வது மாநாடு ஞாயிறன்று (ஜூலை 27) சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டது. மேலும், சுமைப்பணி தொழிலாளர் களுக்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், பொதுத் துறைகளை தனியார்மய மாக்குவதை கைவிட வேண்டும், சரக்கு பரிவர்த்தனை மதிப்பில் 2 விழுக்காடு பிடித்தம் செய்து சேமநல நிதி உருவாக்க வேண்டும், சுமைப்பணி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவது கண்டனத்திற்கு உரியது. சுமைப்பணி தொழிலாளர்களின் வேலை உரிமையை ஒன்றிய, மாநில அரகள் பாதுகாக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.திருவேட்டை தலைமை தாங்கி னார். துணைத் தலைவர் ஜி.கோதண்டன் சங்க கொடியை ஏற்றினார். துணைச் செயலாளர் சி.குமார் வரவேற்றார். துணைத்தலைவர் எஸ்.இருதயராஜ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜே.பட்டாபி துவக்க உரையாற்றினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.அருள்குமார் வேலை அறிக்கையும், பொருளாளர் எம்.ராமன் வரவு செலவு அறிக்கையும் சமர்பித்தனர். துணைச் செயலாளர் பி.எஸ்.ரகுபதி நன்றி கூறினார். 21 பேர் கொண்ட நிர்வாகக் குழுவின் தலை வராக சி.திருவேட்டை, பொதுச் செயலாள ராக ஆர்.அருள்குமார், பொருளாளராக எம்.ராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.