கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக
சிஐடியு சிறப்பு மாநாட்டில் தீர்மானம்
மேட்டுப்பாளையம், அக்.12- நசிந்து வரும் கைத்தறி நெசவா ளர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க வேண்டும் என மேட்டுப் பாளையத்தில் சிஐடியு சார்பில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் இந்திய தொழிற் சங்க மையத்தின் (சிஐடியு) 16 ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டை முன்னிட்டு, ‘மேட்டுப் பாளையம் உழைக்கும் மக்களின் வாழ்வுரிமை சிறப்பு மாநாடு’ ஞாயி றன்று நடைபெற்றது. ஸ்ரீகிருஷ்ணா கலையரங்கில் நடைபெற்ற இம் மாநாட்டிற்கு சி.பெருமாள் தலைமை தாங்கினார். சித்திக் வர வேற்றார். சிஐடியு மாநில மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் சி.பத்ம நாபன், சிஐடியு மாவட்டச் செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தலை வர் மனோகரன், பொருளாளர் ஆர். வேலுசாமி, சிபிஎம் மேட்டுப்பாளை யம் தாலூகா செயலாளர் கனகராஜ் ஆகியோர் பேசினர். இம்மாநாட்டில், சாலையோர வியாபாரிகளுக்கு தமிழக அரசு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவக் காப்பீட்டை உறுதிப் படுத்த வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பென்சன் ரூ.3000 வழங்க வேண்டும். ஆட்டோ, சாலை போக்குவரத்து ஓட்டுநர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும். நசிந்து வரும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். கே.ஜி.டெனிம் தொழிலாளிகளுக்கு நிலுவை சம்பளம் வழங்கி, ஆலையை திறந்து நடத்திட வேண் டும். புதிதாக கட்டப்பட்டு வரும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலை யத்தில் தரைக்கடை வியாபாரிக ளுக்கு கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும் உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், ஆர்.சுரேஷ் நன்றி கூறினார்.
