tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சிறுமியின் கர்ப்பத்தை மறைக்க  லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர் கைது

தருமபுரி, செப்.24- சிறுமி கர்ப்பம் தரித்ததை மறைக்க வும், பெற்றோரை மிரட்டி லஞ்சம் கேட்ட  காவல் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை யினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதி யைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந் தைகள் உள்ளனர். கடந்த மார்ச் 26 ஆம் தேதி யன்று 16 வயதுடைய இரண்டாவது மகள், அதேபகுதியை சேர்ந்த நிர்மல்குமார் என்பவரை காதல் திருமணம் செய்துக் கொண்டார். இதில் சிறுமி 4 மாத கர்ப்ப மாக இருந்ததை கண்டறிந்த சமூக நலத்துறை அலுவலர் இதுகுறித்து பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்  ஆய்வாளர் வீரம்மாளுக்கு (50) தகவல் அளித்தார். இதையடுத்து இருதரப்பினரை யும் அழைத்து விசாரணை செய்த வீரம் மாள், ‘18 வயது ஆவதற்கு முன்பு உங்களு டைய மகளை திருமணம் செய்து கொடுத் ததற்காக, குழந்தை திருமண தடுப்புச்சட்டத் தின் கீழ் உங்களை கைது செய்து சிறையில் அடைக்க உள்ளதாகவும், ரூ.50 ஆயிரம் கொடுத்தால் வழக்கை கைவிட்டு விடுவதாக வும் பெற்றோரிடம் கூறியுள்ளார். பணம் கொடுக்க விரும்பாத சிறுமியின் தாயார், இது குறித்து தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்கா ணிப்பாளர் நாகராஜிடம் புகாரளித்தார். இதை யடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டு களுடன் சென்ற சிறுமியின் தாயாரை, துணை  காவல் கண்காணிப்பாளர் நாகராஜன், ஆய் வாளர் பெருமாள் தலைமையிலான போலீ சார் பின்தொடர்ந்து சென்றனர். தொடர்ந்து, காவல் ஆய்வாளர் வீரம்மாளிடம் லஞ்ச பணத்தை பெறும் போது, அங்கு மறைந்தி ருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வீரம்மாளை கைது செய்து விசாரணை நடத்தினர். சுமார்  ஒரு மணி நேரம் நடத்திய விசாரணையில் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதை யடுத்து, வீரம்மாளை கைது செய்து தரும புரி சிறையில் அடைத்தனர்.

பட்டாசு விற்பனையை முறைப்படுத்தக்கோரி மனு

தருமபுரி, செப்.24- தருமபுரி மாவட்டத்தில் வெடி பொருட்கள் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகத்தில் பட்டாசு வணிகர்கள் மனு அளித்தனர். தருமபுரி மாவட்ட பட்டாசு வணிகர் சங் கத்தினர்  செவ்வாயன்று ஆட்சியரகத்தில் மனு அளித்தனர். அம்மனுவில், தருமபுரி மாவட்டத்தில் சுமார் 40 ஆண்டுகளாக சிறு, குறு தொழிலாக பட்டாசு விற்பனைத் தொழில் செய்து வருகிறோம். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஆயிரக்கணக்கான தொழிலா ளர்களுக்கு இத்தொழில் வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த சிலர் வெடி மருந்து சட்டத்தை மீறும் வகையில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமங்களைப் பெற்று, கடந்த சில ஆண்டுகளாக தருமபுரி  மாவட்டத்தில் முறைகேடாக பட்டாசுப் பொருட்கள், அனுமதி வழங்காத வெடி பொருட்களை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். தீபாவளி நெருங்கும் நிலையில், இதுபோன்ற நபர்களுக்கு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் வழங்கக் கூடாது. உரிமம் பெற்றுள்ள நபர்கள் முறை யற்ற வகையில் வெடிபொருள்களை விற் பனை செய்வதை தடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் இயந்திரங்கள் குறித்த கருத்துக்காட்சி

சேலம், செப்.24- சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடை பெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் குறித்த கருத்துக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசா யிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் இரா.பிருந்தாதேவி, தலைமையில் புத னன்று நடைபெற்றது.  முன்னதாக ஆட்சியரக தரைதளத்தில் வேளாண்மை – உழவர் நலத் துறை மூலம் வேளாண் இயந்திரங்கள் குறித்த கருத்துக்காட்சி அமைக்கப்பட்டு விவசாயி களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதே போன்று, மரபுசார் விதைகள், வேளாண் உற்பத்தியாளர்கள் நிறுவனம் சார்பில் தயா ரிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்கள், சிறுதானி யங்கள் குறித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரங்குகளும் அமைக்கப்பட்டி ருந்தன. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலு வலர் ரா.ரவிக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) விவேக் யாதவ், வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்கு நர் அர.பிரகாசம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மஞ்சுளா உட்பட தொடர் புடைய அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.