ஆக்கிரமிக்கப்பட்ட சாலை மீட்பு
கோபி, ஜூலை 8- கோபி அருகே பவளமலை சாலையில் ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டி ஆட்சியரிடம் மனு அளித்த நிலை யில், வட்டாச்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆக்கிர மிப்புகளை அகற்றினர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள பா.வெள்ளாள பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பவளமலை செல்லும் சாலை யில் எஸ்பி.நகர், செல்வபுரம், திலக்நகர் உள்ளிட்ட பகுதிக ளில் சுமார் 20 அடி வரை சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ள னர். இதனால், தினசரி அவ்வழியாக வேலைக்கு செல் வோர், நடைபயிற்சி மேற்கொள்வோர் மற்றும் விவசாயப் பணி களுக்கு செல்வோர்கள் குறுகிய சாலையில் சென்று வரு கின்றனர். இந்நிலையில் பவளமலை சாலை வழியாக வாகனங் கள் வருவதால் அவ்வபோது விபத்துக்கள் ஏற்படுகிறது. சிலர், இந்த சாலையை ஆக்கிரமித்து அடர்ந்த முள்வேலி அமைத் திருக்கின்றனர். இதனால், இரவு நேரங்களில் சாலையில் விஷ சந்துக்கள் உலாவி வருகிறது. எனவே பவளமலை சாலை யில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி மாவட்ட ஆட்சியரி டம் பொதுமக்கள், விவசாயிகள் மனு அளித்திருந்தனர். இதனடிப்படையில் வருவாய்துறையினர் பவளமலை சாலையில் நில அளவீடு செய்ததில் சாலையின் இருபுறமும் சுமார் 20 அடி வரை ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது. இதனையடுத்து செவ்வாயன்று வட்டாச்சியர் தலைமையில் வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சிதுறையினர், காவல்துறையினர், ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிர மிப்புகளை அகற்றினர். அப்போது ஆக்கிரமிப்பு நிலங்க ளில் இருந்த 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் கோபி நகராட்சியுடன் பா.வெள்ளாள பாளையத்தை இணைப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் நகராட்சி பகுதியையொட்டி உள்ள ஊராட்சி எல்லைகளில் சாலைகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.