tamilnadu

காட்டுப்பன்றி தொல்லை கட்டுப்படுத்த புதிய முயற்சி

காட்டுப்பன்றி தொல்லை கட்டுப்படுத்த புதிய முயற்சி

 

கோவை, செப்.18- ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டா ரப் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் மற்றும் மயில்களால் விவசாய பயிர்கள் சேதமடைவ தைத் தடுக்க, வனத்துறையினர் விவசாயிக ளுக்கு புதிய ஆலோசனை வழங்கியுள்ள னர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற் குட்பட்ட 6,400 ஏக்கர் விவசாய நிலங்களில் தென்னை, நெல் மற்றும் ஊடுபயிர்கள் பயி ரிடப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் வனப் பகுதியிலிருந்து வெளியேறும் காட்டுப்பன்றி கள் மற்றும் மயில்கள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாக விவ சாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இத னைத் தொடர்ந்து, ஆனைமலை ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் பொள்ளாச்சி வனச் சரகர் ஞானபாலமுருகன் தலைமையில் வனத் துறையினர், விவசாயிகள் மற்றும் வரு வாய்த்துறையினர் பங்கேற்ற ஆலோச னைக் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இதில், விவசாயிகள் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு வனத்துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு வழங்கும் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை யிலான இழப்பீட்டுத் தொகை போதுமான தல்ல, ஏக்கருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க  வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த வனச்சரகர் ஞான பாலமுருகன், வனத்துறை உயர் அதிகாரிக ளின் உத்தரவின்படி காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவதற்கு இக்கூட்டம் நடத்தப் படுகிறது. விவசாயிகள் தங்கள் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை கிராம நிர்வாக அலுவ லர்களுக்கு தெரிவித்தால், அவை வனத்து றைக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உதகை, கொடைக் கானல் போன்ற பகுதிகளில் காட்டுப்பன்றிக ளை கட்டுப்படுத்துவதற்கு, நீர் ஃபோ (Neem Pho) ரசாயனத்தை தண்ணீரில் கலந்து,  வண்ண சேலைகளில் தடவி, காட்டுப்பன்றி கள் நடமாட்டம் உள்ள விவசாய நிலங்க ளைச் சுற்றி அமைக்கிறார்கள். இதனால், பன்றிகளின் தொல்லையை எளிதில் கட்டுப்ப டுத்த முடிகிறது. இந்த புதிய முயற்சியை இங்குள்ள விவசாயிகள் பின்பற்றலாம், என்றார்.