tamilnadu

img

தேசிய தர சான்றிதழ் குழுவினர் ஆய்வு

தேசிய தர சான்றிதழ் குழுவினர் ஆய்வு

பொள்ளாச்சி, ஜூலை 30- பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவம னையில் தேசிய தர சான்றிதழ் குழுவினர் புதனன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் இருந்து தேசிய தர சான்றிதழ் குழு வினருடன் மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை  மருத்துவமனையில் சென்று ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசுக்கு அறிக்கை அளித்து வருகின்றனர். இந்த அடிப்ப டையில் திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவம னையான பழனி அரசு மருத்துவமனையில் இருந்து டாக்டர் சதீஷ் மற்றும் பழனி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை தேசிய தர சான்றிதழ் ஊழியர்கள் இருவர் பொள்ளாச்சி  தலைமை மருத்துவமனைக்கு புதனன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவமனையின் தூய்மை, நோயாளிக ளுக்கு வழங்கப்படும் தண்ணீர் வசதி, கழிவறை வசதிகள், வார்டின் சுத்தம், நோய் தடுப்பு முயற்சிகள், பொதுக்கழிவு கள், மருத்துவ கழிவுகள் எப்படி அகற்றப்படுகிறது? மின்சார சிக்கனத்திற்காக சோலார் மற்றும் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது? சமையலறை துணியை துவைக்கும் அறை முதலியவற்றை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ராஜா மற்றும் கண்காணிப்பாளர்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை தேசிய தர சான்றிதழ் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.