திருப்பூரில் குண்டும், குழியுமாக இருக்கும் சாலைகளில் வாகன ஓட்டிகள் சாகசப் பயணம்
திருப்பூர், அக்.3- திருப்பூரில் குண்டும், குழியுமாக உள்ள லட்சுமிநகர் சாலையில் தினம்தினம் வாகன ஓட்டிகள் சாகசப் பயணம் செய்யும் நிலை உள் ளது. திருப்பூர் மாநகரில் பி.என்.ரோடு, மில்லர் பஸ் நிறுத்தத்தில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் லட்சுமி நகர் சாலை படுமோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. ஏராளமான பனியன் நிறுவனங்கள் அமைந்திருக்கும் பாரம்பரியாமான பகுதி லட்சுமி நகர். இந்த பகுதிக்குள் செல்லும் பிரதான சாலையில் ஆங்காங்கே குடிநீர் குழாய், பாதாள சாக்கடை பணிகளுக்காக சாலைகளில் குழி தோண்டி முழுமையாக மூடி சீரமைக்கப்படா மல் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கா னோர் சென்று வரும் இச்சாலையை சீர மைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி யுள்ளனர். அதேபோல் லட்சுமி நகருக்கு எதிரில் பிஎன் சாலைக்கு மேற்குப் பகுதியில் ராம் நகர் சாலையும் படுமோசமாக சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இது குறித்து இந்த பகுதி மக்கள் கூறுகையில், புதிய பேருந்து நிலையம், எம்.எஸ்.நகர், நெசவாளர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பு சாலையாக இந்த சாலை உள்ளது. நகர விரி வாக்கத்தால், மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் இதுவும் ஒன்று. மாநகரத்தின் சரி பாதி பகுதிகளை இணைக்கும் இந்த சாலை இப்படி குண்டும் குழியுமாக உள்ளது. அடிக்கடி இரு சக்கர வாகனத்தில் வருப வர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின் றனர். குறிப்பாக மில்லர் ஸ்டாபை இணைக்கும் சாலை கடும் மோசமாக உள்ளது. எனவே முக்கிய சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரினர். ராம்நகர் சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு போராட்ட அறிவிப்பு செய்தனர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர், மாநக ராட்சி அதிகாரிகள், சாலையை செப்பனி டுவதற்கான பணி விரைவில் நடைபெறும். எனவே அதற்கு அவகாசம் கொடுத்து போராட்டத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டனர். எனினும் மாநகராட்சி அதிகாரிகள் வாக்கு றுதி அளித்தபடி சாலை செப்பனிடப்பட வில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மாநகராட்சி நிர்வா கம் உறுதியளித்தபடி ராம் நகர் சாலை, லட்சுமி நகர் சாலையைச் சீரமைத்துத் தராவிட்டால் மக்கள் போராடுவதைத் தவிர வேறு வழி யில்லை என்று குமுறலுடன் தெரிவித்தனர்.
