tamilnadu

img

மாதர் சங்க இடைக்கமிட்டி மாநாடுகள்

மாதர் சங்க இடைக்கமிட்டி மாநாடுகள்

தருமபுரி, ஜூலை 27- மாதர் சங்கத்தின் தருமபுரி, பொள்ளாச்சி, சேலம் இடைக்க மிட்டி மாநாடுகளில், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தருமபுரி நகர  3 ஆவது மாநாடு, தருமபுரியில் நகரத் தலைவர் ஒய்.சுபா தலைமையில் நடைபெற்றது. மூத்த தோழர் எஸ். ரத்தினம்மாள் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். மாவட் டக்குழு உறுப்பினர் கே.ரங்கநாயகி வரவேற்றார். நகரச்  செயலாளர் எஸ்.நிர்மலாராணி அறிக்கையை முன்வைத்தார்.  மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்மணி வாழ்த்திப் பேசி னார். இம்மாநாட்டில், தருமபுரி நகரத்தில் பாதாள சாக்கடை  திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இத்திட்டத் தால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். விடுபட்ட வர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் நிதி  வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் நகரத் தலைவராக  ஒய்.சுபா, செயலாளராக எஸ்.நிர்மலாராணி, பொருளாளராக  கே.ரங்கநாயகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச்  செயலாளர் ஆர்.மல்லிகா நிறைவுரையாற்றினார். பொள்ளாச்சி மாதர் சங்கத்தின் கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா 9 ஆவது மாநாடு, சனியன்று வங்கி ஊழியர் சங்க அலு வலகத்தில் தோழர் மைதிலி சிவராமன் நினைவரங்கில் நடை பெற்றது. தாலுகா தலைவர் டி.விஜயா தலைமை வகித்தார். பொருளாளர் எம்.சித்ரா வரவேற்றார். மாநிலக்குழு உறுப் பினர் எஸ்.ராஜலட்சுமி துவக்கவுரையாற்றினார். தாலுகா செயலாளர் என்.ரேவதி அறிக்கையை முன்வைத்தார். சிபிஎம் தாலுகா செயலாளர் மூ.அன்பரசன், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டப் பொருளாளர் கே.மகாலிங்கம் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், நகராட்சிக்கு சொந் தமான தினசரி காய்கறி மார்க்கெட்டை, உடனடியாக ஏலம்  விட வேண்டும். புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி களை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தாலுகா தலைவராக எம்.சித்ரா,  செயலாளராக என்.ரேவதி, பொருளாளராக ஒய்.ரூத் ஏஞ்ச லின் உட்பட 13 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப்பட் டது. மாவட்டச் செயலாளர் டி.சுதா நிறைவுரையாற்றினார். டி.மஞ்சுளா நன்றி கூறினார். சேலம் மாதர் சங்கத்தின் சேலம் தாலுகா 10 ஆவது மாநாடு,  தளவாய்பட்டியில் தாலுகா தலைவர் சி.சங்கீதா தலைமை யில் நடைபெற்றது. சங்கத்தின் கொடியை எஸ்.பார்வதி ஏற்றி  வைத்தார். துணைச்செயலாளர் எல்.விக்னேஸ்வரி வரவேற் றார். மாவட்ட உதவித்தலைவர் கே.ராஜாத்தி துவக்கவுரை யாற்றினார். தாலுகா செயலாளர் எம்.செல்வி, பொருளாளர்  எஸ்.பூங்கோதை ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்த னர். மாவட்டத் தலைவர் ஆர்.வைரமணி, உதவிச்செயலாளர்  ஜி.கவிதா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், நலிந்து வரும் வெள்ளிக்கொலுசு தொழிலை பாதுகாக்க வேண்டும். சேலம் ஆவின் பால் பண்ணைக்கு நிலம்  கொடுத்து பாதிக்கப்பட்ட 44 குடும்பங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தாலுகா தலைவராக எம்.செல்வி, செயலாளராக எஸ்.பூங்கோதை, பொருளாளராக எஸ்.கஸ்தூரி உட்பட 13 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட உதவிச்செய லாளர் டி.பரமேஸ்வரி நிறைவுரையாற்றினார்.