tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மன உளைச்சலில் தம்பதியர் தற்கொலை

நாமக்கல், செப்.25- உடல்நிலை பாதிப்பால் ஏற்பட்ட மன உளைச்சலில் தம்பதி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள குளத்துக்காடு பகுதியில் கேசவராஜ்- சாந்தி தம்பதியர் வசித்து வந்துள்ளனர். அவர்களுடைய, மூன்று பெண் பிள்ளைகளுக்கும் திருமணமாகிய நிலையில், தம்பதியர் இரு வரும் கடந்த ஐந்து வருடங்களாக தனியாக வசித்து வருகின்ற னர். இந்நிலையில் சாந்திக்கும் கேசவராஜுக்கும் உடல்நிலை  பாதிப்பு ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை  ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வருவாய் இழப்பு காரண மாக தவித்து வந்தனர். இதனால் ஆங்காங்கே கடன் வாங்க  வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வியாழன்று காலை 9 மணி கடந்தும், சாந்தி கேசவராஜ் தம்பதி வசித்த வீடு திறக்கப்படாமல் உட் பகுதியில் தாளிடப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்து அருகில் இருப்பவர்கள் கதவை தட்டி பார்த்தும் திறக்காத தால் கதவை உடைத்துப் பார்த்துள்ளனர். அப்பொழுது சாந்தி, கேசவராஜ் தம்பதியினர் சேலையால் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் காவல் ஆய்வாளர் தவமணி தலைமையில் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.