மார்க்சிஸ்ட் கட்சி சுதந்திர தின கொடியேற்று விழா
திருப்பூர், ஆக. 16 – 79 ஆவது இந்திய சுதந்திர தினத்தன்று, சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகமான தியாகி பழனிச்சாமி நிலை யம் முன்பு கட்சியினர் கொடியேற்றறினர். கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப் பன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கட்சியின் மூத்த தோழரும், சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவருமான எம்.ராஜகோபால் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் செங் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்வில், மாநகரச் செயலாளர் பா.சௌந்தரராசன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாவட் டக்குழு உறுப்பினர் ஆர்.மைதிலி ஆகியோர் சுதந்திர தின உரை நிகழ்த்தினர். மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி உள்பட கட்சி அணியினர் திரளாகக் கலந்து கொண்டனர். இதேபோல், திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமாநல்லூர் பகுதி கிளைகள் சார்பில் கட்சி அலுவ லகம் முன்பு தேசிய கொடி ஏற்றபட்டது. இதில், ஒன்றியக் குழு உறுப்பினர் பி.கே.கருப்புசாமி உட்பட கிளைச் செய லாளர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்று மதசார் பின்மையை பாதுகாப்போம் என உறுதி மொழி எடுத்து கொண்டனர்.