பூலுவப்பட்டி துவக்கப்பள்ளி வளாகத்திற்குள் பாம்புகள்: அச்சத்தின் பிடியில் குழந்தைகள் படிப்பது எப்படி?
திருப்பூர், செப்.16- திருப்பூர் மாநகராட்சி பூலுவப்பட்டி பகுதி யில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் பாம்புகள் அதிகளவில் வரு கின்றன. இதனால் மாணவ, மாணவிகள் அச்ச துடன் பள்ளிக்கு வரும் நிலை உள்ளது. எனவே இங்கு சுற்றுப்புறத்தை தூய்மைப்ப டுத்தி, பாம்புகள் வருவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளி மேலாண்மை குழுவினர் மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தனர். இதையடுத்து செவ்வா யன்று வருவாய் வட்டாட்சியர் இந்த பள் ளிக்கு வந்து நேரில் ஆய்வு மேற்கொண் டார். திருப்பூர் மாநகராட்சி 4 ஆவது வார்டு பூலுவபட்டியில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அம்மன் நகர், விக்னேஸ்வரா நகர், தியாகி பழனிச்சாமி நகர், ஸ்ரீநகர் உட்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் இங்கு படித்து வருகின்றனர். இந்த பள்ளி யில் ஆங்கில வழி, தமிழ் வழி கல்வி என 18 பிரிவுகள் உள்ளன. கணினி ஆய்வகம், சிலம்ப பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரி வுகளுக்கு ஆசிரியர்கள் நியமித்து வகுப்பு கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் இந்த பள்ளி வளாகத்திற் குள் பாம்புகள்படையெடுத்து வருவது அதிக ரித்துள்ளது. பள்ளி வளாகத்திற்கு அருகா மையில் புல் புதர் மண்டி கிடப்பதால், அடிக் கடி பாம்புகள், விஷப் பூச்சிகள் பள்ளிக ளுக்குள் வந்து விடுகின்றன. இதனால் குழந்தைகள் பாடத்தில் கவனம் செலுத்த முடி யவில்லை. எப்போதும் அச்சத்தின் பிடியில் இருந்தால் மாணவ, மாணவிகள் எப்படிப் படிக்க முடியும். எனவே புதர் மண்டிக் கிடக் கும் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். மேலும், பள்ளியில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற் போது புது கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருகின்றன. புதிய வகுப்பறைகள், கழிவறைகள் கட்ட இடத்தேவை உள்ளது. எனவே அருகாமையில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி, வருவாய்த்துறைக்குரிய அந்த இடத்தைப் பள்ளிக்கு தர வேண்டும் என பள்ளி மேலாண்மை குழுவினர் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசி ரியரிடம் கேட்டபோது, அருகாமையில் உள்ள காலி இடத்தில் இருந்து பள்ளி வளா கத்திற்குள் கொடிய விஷமுள்ள நாகப்பாம்பு, சாரை பாம்பு உள்ளிட்ட பாம்புகளுடன், விஷப்பூச்சிகளும் வருகின்றன. இதுகுறித்து வட்டார கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கப் பட்டுள்ளது. காலையில் வகுப்பறைகளை முழுமையாக சோதனை செய்த பின்பு தான் மாணவ, மாணவிகளை வகுப்பறைகளுக் குள் அனுமதிக்கிறோம், என்றார். திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் கதிர்வேல் கூறுகையில், பூலுவபட்டி துவக்க பள்ளியில் செவ்வாயன்று ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அருகாமையில் உள்ள இடம் வருவாய்த்துறையிடம் உள்ளது. ஆக்கிர மித்து கட்டப்பட்ட கட்டிடம் முழுமையாக பயன்படுத்தும் நிலையில் உள்ளது. இதை அரசு துறைகளுக்கு பயன்படுத்தி கொள்ள லாம். மேலும் ஓட்டுக் கூரையுடன் இருப்பதை இடித்து அப்புறப்படுத்த விடலாம். அங்கன் வாடி, நியாய விலை கடை உள்ளிட்ட வைகளுக்கு இடம் தேவை உள்ளது என கூறி யுள்ளனர். தற்போது துவக்கப்பள்ளி சார்பி லும் இடத்தேவை உள்ளது என கூறியுள்ள னர். அரசு துறை சார்பில் விண்ணப்பிப்பவர்க ளுக்கு இடம் வழங்கப்படும். மேலும், தற் போது இந்த இடத்தில் புதர் மண்டி கிடப்பது குறித்து மாநகராட்சிக்குத் தகவல் அளிக்கப் பட்டுள்ளது. அவர்கள் இடத்தை தூய்மைப்ப டுத்திக் கொடுப்பார்கள் என தெரிவித்தார்.