குப்பைகள் எரிப்பதால் சுகாதார சீர்கேடு
நாமக்கல், ஆக.28- குமாரபாளையத்தில் குடியிருப்பு அருகே குப்பை களை எரிப்பதால் எழும் புகையால், பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித் துள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கிழக்கு, காவேரி நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்க ளால் எரிக்கப்படுகிறது. இதனால் அருகில் வசிக்கும் பொதுமக்கள், ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் கூறுகையில், காவேரி நகர் பகுதியில் அதிக குடியிருப்புகள் உள்ள இடத்தில், குப்பைகள் அதிகளவில் கொட்டி இருப்பு வைக்கப்படு கிறது. இதனை அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து செல்கின்றனர். இதனால் ஏற்படும் புகை மூட்டம், அருகிலுள்ள பொதுமக்களுக்கு பல நோய் களை உருவாக்கி வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் விமலா என்ற பெண், இந்த புகையால் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, சேகரிக்கப்படும் குப்பைகளை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.