அரசு பொதுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
உதகை, ஜூலை 9- ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, மத்திய தொழிற் சங்கங்கள் விடுத்த அறைகூவலை ஏற்று அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் முழுமை யான போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை எல்ஐசி 3ஆம் நிலை, 4 ஆம் நிலை ஊழியர்கள் மற்றும் முக வர்கள் அனைவரும் எல்ஐசி அலுவகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர் சங்க நிர்வாகி கோபால் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் தலைவர் கஜேந்திரன், செய லாளர் ராஜ்குமார், லிகாய் முகவர்கள் சங்க நிர்வாகிகள் சுவாமிதுரை, தருமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை ஜாக்டோ ஜியோ சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ப. செந்தில்குமார், கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பிரகலதா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதே போன்று, பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெகநாதன் தலைமை வகித்தார். இதில் திராளனோர் பங் கேற்றனர். இதேபோன்று, இன்சூரன்ஸ், பிஎஸ்என் எல், வங்கி உள்ளிட்ட மத்திய மாநில அரசு மற் றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழி யர்கள் பெருமளவு வேலை நிறுத்த போராட் டத்தில் பங்கேற்றனர். கோவையில் நஞ்சப்பா சாலையில் உள்ள, யுனைடெட் இந்தியா இன் சூரன்ஸ் வளாகத்தில், நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, எஸ்.வி.சங்கர் தலைமையேற்றார். இதில், கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஷியாம் சுந்தர், கஜேந்திரன், பிரவின் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் திரளானோர் பங்கேற் றனர். இதேபோன்று மேட்டுப்பாளையம் இன் சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ராஜேந்திரன் தலைமையேற்றார். இதில் திரளானோர் பங் கேற்றனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், எல்ஐசி அலுவலகம் முன்பு எல்ஐசி மற்றும் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எல்ஐசி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நிர்வாகி ராஜகோபால் தலைமை வகித் தார். அனைத்து தொழிற்சங்க கூட்டமைப் பின் தலைவர் சி.பரமசிவம் வாழ்த்திப் பேசி னார். வங்கி ஊழியர் சங்க நிர்வாகி நரசிம் மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட ஆர்ப் பாட்டத்தின் நிறைவில் கணேசன் நன்றி கூறி னார். ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒருங் கிணைப்பாளர்கள் ச.விஜயமனோகரன், பி. சரவணன், அ.மதியழகன், பி.எஸ்.வீரா கார்த்திக், அ.ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர். ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மு.சீனிவாசன் பங்கேற்று உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ச.நேரு நிறைவுரை யாற்றினார். இதில், அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.