tamilnadu

img

அரசு ஊழியர் ஒருங்கிணைப்புக்குழு ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் ஒருங்கிணைப்புக்குழு ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஆக.21- ஈரோட்டில் மத்திய அரசு ஊழியர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 8 ஆவது ஊதியக்குழு உறுப்பினர்களை உடனே  அறிவித்து விதிகளை இறுதிப்படுத்த வேண்டும். ஓய்வூ திய சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலி யுறுத்தி மத்திய அரசு ஊழியர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் புதனன்று ஈரோடு தலைமை அஞ்சல் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதவித்தலை வர் டி.சக்திவேல் தலைமை வகித்தார். இதில் சங்கத் தின் செயலாளர் கே.கோபிநாத், ஓய்வூதியர் சங்க மாவட் டச் செயலாளர் என்.ராமசாமி, பிஎஸ்என்எல் ஓய்வூதியர்  சங்க மாநில உதவித்தலைவர் என்.குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வருமான வரித் துறை அலுவலகத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.