மலைப்பாதையில் ராட்சதப்பாறை விழுந்து போக்குவரத்து பாதிப்பு
உதகை, செப்.10 - உதகையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கல் லட்டி மலைப்பாதையில் ராட்சதப் பாறை மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள் ளது. உதகையிலிருந்து மசினகுடி, மைசூர், முதுமலை உள்ளிட்ட பகுதி களுக்குச் செல்லும் வாகனங்கள் இதனால் நிறுத்தப்பட்டன. தெற்கு ஒரிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நில வும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித் திருந்தது. இந்த அறிவிப்பின்படி, புதனன்று காலை முதல் உதகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிக ளில் தொடர் மழை பெய்து வரு கிறது. இந்த கனமழையின் காரண மாக, உதகை அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதி வழியாகச் செல்லும் கல்லட்டி மலைப்பாதை யின் 20ஆவது கொண்டை ஊசி வளைவில், மலை உச்சியிலிருந்து ஒரு ராட்சதப் பாறை மற்றும் சில மரங்கள் சரிந்து விழுந்தன. பெரும் சத்தத்துடன் உருண்டு வந்த பாறை கள், வழியிலிருந்த தடுப்பு வேலி கள் மற்றும் பெயர் பலகைகளைச் சேதப்படுத்தி, பள்ளத்தில் விழுந் தன. பாறை மற்றும் மரங்கள் விழுந்ததால், கல்லட்டி மலைப் பாதையில் போக்குவரத்து முற்றி லும் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக, உதகையிலிருந்து மசினகுடி, மைசூர் மற்றும் முதுமலைக்குச் செல்லும் வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின் றன. பேருந்துகளில் இருந்த பயணி கள் மற்றும் பொதுமக்கள் உடனடி யாக ஒன்றிணைந்து, சாலையில் கிடந்த மரங்களையும் கற்களையும் அகற்றி, வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர். இதன் பிறகு, போக்குவரத்து மெதுவாக மீண்டும் தொடங்கியது. நலவாய்ப்பாக, அதிகாலை நேரத்தில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்ததால், எந்தவித மான உயிர்ச் சேதமும் ஏற்பட வில்லை. ஏற்கனவே ஒருமுறை இதே பகுதியில் பாறை விழுந்து விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக் கது. மீண்டும் அதே இடத்தில் ராட்சதப் பாறை விழுந்ததால், சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத் துறையி னர் உடனடியாக இந்த இடத்தில் ஒரு பலமான தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்றும், விரி சல் ஏற்பட்ட சாலையைச் சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தொடர்ந்து இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க, கல்லட்டி மலைப்பாதை யில் உள்ள பாறைகளின் நிலைத் தன்மையை ஆய்வு செய்ய புவியி யல் வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதே போன்று, குன்னூர் பகுதியிலும் கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத் திற்கு ஆளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் நிலவும் அதீத குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது.