தீண்டாமை ஒழிப்பு முன்னணி பேரவை
தருமபுரி, ஆக.19- தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தருமபுரி ஒன்றிய பேரவைக் கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தருமபுரி ஒன்றிய பேரவைக் கூட்டம், முத்து இல்லத்தில் செவ்வாயன்று, ஒன்றியத் தலைவர் டி.மாரியப்பன் தலைமையில் நடைபெற் றது. வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.அருள்குமார் துவக்கவுரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்த சாமி, பொருளாளர் கே.ரங்கநாயகி ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பி னர் டி.எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில், பட்டியலின மக்கள் பயன் பெறும் வகையில், தாட்கோ கடன் பெறுவதை எளிமைபடுத்த வேண்டும். தூய் மைப் பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும். உங்கரானஅள்ளி ஊராட்சியில் 78 பய னாளிகளுக்கு இலவச பட்டா கொடுத்துள்ள இடத்தை உடனடி யாக அளந்து அத்து காட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, அமைப்பின் ஒன்றியத் தலைவராக எம்.அருள்குமார், செயலாளராக டி.மாரியப்பன், பொருளா ளராக பெருமாள் உட்பட 11 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் நிறைவுரையாற்றினார்.