மருத்துவமனையில் கட்டடம் கட்ட அடிக்கல்
நாமக்கல், ஆக.22- கொல்லிமலை அரசு மருத்து வமனையில் ரூ.4.18 கோடி மதிப் பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிக்கு அமைச்சர் மதிவேந் தன் அடிக்கல் நாட்டினார். நாமக்கல் மாவட்டம், கொல் லிமலை அரசு மருத்துவமனை யில் ரூ.4.18 கோடி மதிப்பீட்டில் கூடுதல் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந் தன் வெள்ளியன்று அடிக்கல் நாட்டினார். ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசர சிசிச்சை பிரிவுடன் கூடிய கூடுதல் புதிய கட்டடம் மற்றும் ரூ.63 லட்சம் மதிப் பீட்டில் புதிய பிணவறைக் கூடம் கட்டும் பணி துவங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், சட்ட மன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி, அட்மா குழு தலைவர் செந்தில்முருகன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.