tamilnadu

img

திருப்பூரில் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் கடைப்பிடிப்பு

திருப்பூரில் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் கடைப்பிடிப்பு

திருப்பூர், செப்.17- தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு,  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் புதனன்று திருப்பூர் ரயில் நிலையம் அருகில்  உள்ள பெரியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டத் தலைவர் பா.ஞானசேகரன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் ஆர்.பரமசிவம், மாவட்டப் பொரு ளாளர் எஸ்.சண்முகம், மாவட்ட துணைத் தலைவர் ச.நந்த கோபால், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வ ரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் க.நிருபன் சக்கரவர்த்தி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர்  சி.பானுமதி, சிஐடியு மோட்டார் சங்கச் செயலாளர் ஒய்.அன்பு   உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.