tamilnadu

img

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 15- தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் மீது கனிமவளக்கொள்ளை என்ற பெயரில் போடப்பட்ட அபராதத் தொகைகளை ரத்துச் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் மீது போலீசார் கனிமவளக் கொள்ளை  என்ற பெயரில் அபராதம் கட்ட நிர்பந்தம் செய்வதைக் கண் டித்து தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோயில் மைதானத் தில் செவ்வாயன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு. பழனிச்சாமி தலைமை வகித்தார். கிணத்துக்கடவு அதி முக சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், விவசாயிகள் சங்கத்  துணைத் தலைவர் பெரியசாமி உள்ளிட்ட 100க்கும் மேற் பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.