அதி தீவிர வெப்பநிலை உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்
வெப்ப அலை வீச்சு உலகம் முழுவதும் இன்று சாதாரண நிகழ்வாக மாறிவரும் சூழ்நிலையில் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வெப்ப குவிமாடம் (Heat dome) என்ற வளி மண்டலத்தில் உருவாகும் வானிலை நிகழ்வால் இது ஏற்படுகிறது. இதில் ஒரு உயர் அழுத்த அமைப்பு சூடான காற்றைப் பிடித்து வைத்து அதை ஒரு குவிமாடம் போல மூடுகிறது. இதனால் அப்பகுதியில் வெப்பநிலை மிக அதிகமாக உள்ளது.
வெப்ப அழுத்தம் இது வெப்பக் காற்றையும் ஈரப்பதத்தை யும் வெளியேறவிடாமல் பிடித்து வைக்கும். வெப்பநிலை உண்மையில் குறைவாக இருந்தாலும் மிக அதிகமாக இருப்பது போலத் தோன்றும். மனித உடலில் இந்த அதி தீவிர வெப்பநிலை உயர்வால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி ஆரோக்கியத் துறை மற்றும் காலநிலை விஞ்ஞானிகள் எச்ச ரிக்கின்றனர். இது வெப்ப அழுத்தம் (heat stress) என்ற விளைவை ஏற்படுத்துகிறது. வெளியேற்றும் வெப்பநிலையை விட அதிகமான வெப்பநிலையை உடல் அனுபவிக்கும்போது இது ஏற்படுகிறது. “மனித உடல் வியர்வை மூலம் வெப்பத்தைக் குறைக்கும் அற்புத ஆற்றலைப் பெற்றுள் ளது” என்று பாய்சி மாநில பல்கலைக்கழக (Boise State University) பொது மற்றும் மக்கள்தொகை பள்ளி பேராசிரியர் யூவ் ரைஸ்சில் (Uwe Reischl) கூறுகிறார். வியர்வையை உடல் உற்பத்தி செய்யும் போது காற்றில் உள்ள ஈரப்பதத்தால் ஆவி யாதல் கட்டுப்படுத்தப்படுகிறது. தோலில் உருவாகும் வியர்வையை வெளியேறவிடாமல் தடுக்கும் ஆடைகளை ஒருவர் அணிந்துகொள்வது உடல் வெப்ப நிலை அதிகமாக மற்றொரு காரணம். போதிய அளவு நீர் சத்து உடலில் இல்லாத போது நீரிழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் உடல் மேலும் வியர்வை யை உற்பத்தி செய்யமுடியாமல் போகிறது. “வெப்பமான காற்று ஈரமான காற்றை விட அதிக ஈரத்தைப் பிடித்து வைக்கும் இயல்பு டையது. வெப்ப குவிமாட நிகழ்வால் சூடு அதிகமா கிறது. ஈரப்பதத்தின் அளவு அதிகமாகிறது” என்று ரைஸ்சில் கூறுகிறார். ஏராளமான கட்டடங்கள், சாலைகள், நடைபாதைகள், வாகன நிறுத்தும் இடங்கள் போன்றவை சூரிய வெப்பத்தை உறிஞ்சி பகல் முழு வதும் உமிழ்வதால் வெப்ப அழுத்தம் அதிக மாகிறது. “வெப்ப அழுத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட வரம்பில் உள்ள ஒளி அல்லது கதிர்களின் வண்ணங்களைக் குறிக்கும் ஒரு வண்ண மாலை போன்றது” என்று வாஷிங்டன் பல்க லைக்கழக சூழல் மற்றும் தொழில்சார் ஆரோ க்கியப் பிரிவின் பேராசிரியர் கிறிஸ்டி எபி (Kristie Ebi) கூறுகிறார். ஒருவரின் கையில் ஏற்படும் சிவந்த வடுக்கள் முதல் மயக்கம் வரை இதனால் ஏற்படும். உடல் வெப்பநிலை 103 டிகிரி ஃபாரன்ஹீட்/39 டிகிரி செல்சிய ஸைத் தாண்டும்போது சிலரில் வெப்ப அதிர்ச்சி ஏற்படும். சில ஆலோசனைகள் இந்த வெப்ப அதிர்ச்சியால் மூளை மற்றும் பிற உறுப்புகளில் வீக்கம் ஏற்பட லாம். இது ஆபத்தானதாகவும் முடியலாம். குழந்தைகள், முதியோர் மற்றும் கருவுற்ற பெண்கள் வெப்ப அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தட கள விளை யாட்டு வீரர்கள் மற்றும் வெளிப்புற வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடும் வெயி லால் ஆபத்து ஏற்படும். “அதிக மக்கள் வேலை அல்லது வேறு காரணங்களுக்காக இடம் பெயர்ந்து நகர்கின்றனர். அப்போது அவர்களின் உடல் வெப்பம் நிறைந்த சூழ்நிலையில் இருந்து விடுபட விரும்புகிறது. பண்ணை மற்றும் வயல் தொழிலாளர்கள் பூச்சிக்கொல்லிகள் போன்ற இயற்பியல் அல்லது வேதியல் நச்சுக்களில் இருந்து தங்களைப் பாது காத்துக் கொள்ளவேண்டும். இப்பொருட் கள் உடலில் இருந்து வியர்வை ஆவி யாவதை தடுத்து நிறுத்தும் என்பதால் இவர்கள் தகுந்த தற்காப்பு ஆடைகளை அணியவேண்டும். உயர்ந்த வெப்பத்திற்கு ஆளாகும்போது நம் உடல் குளிர்ச்சியடைய சிறிது நேரம் தேவைப்படுகிறது. இந்நிகழ்வு வழக்கமாக இரவில் நடைபெறுகிறது” என்று எபை கூறுகிறார். ஆனால் 1970 முதல் ஒட்டுமொத்த இரவு வெப்பநிலை சராசரியாக 3 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால் மக்களுக்கு உயர் வெப்பத்தில் இருந்து சிறிதளவு விடுதலையே கிடைக்கி றது. “ஓய்வுடன் சேர்ந்து உடல் நீரிழப்பை சரிசெய்யவேண்டும். அதனால் மக்கள் அப்போது வழக்கமாக அருந்துவதை விட அதிக அளவு நீர் அருந்தவேண்டும்” என்று ரைஸ்சில் கூறுகிறார். வெப்ப அலை வீச்சில் இருந்து தப்ப கடி னமான வெளிப்புற செயல்பாடுகளை தவிர்க்கவேண்டும். திரவங்களை அதிகம் அருந்தவேண்டும். சூரியனிடம் இருந்து விலகி இருக்கவேண்டும். குளிர்ச்சி மையங்கள் போன்ற குளிர் சாதன வசதி உள்ள இடங்களில் நேரத்தை செலவழிக்க வேண்டும். குளிர் சாதன வசதி இல்லாமல் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இதோ நிபுணர்கள் கூறும் சில ஆலோச னைகள். குளிர்ந்த நீரில் கால்களை வைத்துக்கொள் ளுதல், ஈரமான துணியை கழுத்தைச் சுற்றி கட்டிக்கொள்ளுதல், உடல் முழுவதும் நீரைத் தெளித்துக்கொள்ளுதல், மின் விசிறியின் கீழ் அல்லது நேராக அமர்தல். பகலில் வெப்பம் வரும் வழிகளில் திரைச்சீலைகளை போடுதல், இரவில் சாளரங்களைத் திறந்துவைத்தல் போன்ற வழிகளையும் பின்பற்றலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வெப்ப அலை வீச்சு என்பது இயல்பான ஒரு நிகழ்வாக மாறிவரும் இன்றைய சூழ்நிலையில் இந்த ஆலோசனைகளை பின்பற்றி நலமுடன் வாழ நாம் முயல்வோம்.
