tamilnadu

img

காலை உணவு திட்டத்தை மேல்நிலை பள்ளிகளுக்கும் விரிவு படுத்துக: சிஐடியு கோரிக்கை

காலை உணவு திட்டத்தை மேல்நிலை  பள்ளிகளுக்கும் விரிவு படுத்துக: சிஐடியு கோரிக்கை

மே.பாளையம், ஆக.26– அரசு ஆரம்பப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவு திட்டத்தை மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விரிவுபடுத்தி வழங்கிட வேண்டும் என மேட்டுப் பாளையம் சிஐடியு பொதுத்தொழி லாளர் சங்கம் தமிழக முதல்வ ருக்கு கோரிக்கை அனுப்பியுள் ளது. இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பாஷா,  தமிழக முதல்வருக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் தெரி வித்துள்ளதாவது, தமிழக அரசின் முன்னோடி நலத்திட்டங்களில் ஒன் றாக அரசுப் பள்ளி மாணவ, மாணவி களுக்கான “காலை உணவு திட் டம்” ஆகும். இந்தத் திட்டம் தொடங் கப்பட்டதிலிருந்து, பள்ளிக்கு பசியு டன் வருவதை தவிர்க்க முடிந்தது, மாணவர்களின் உடல் நலம், மன  உறுதி, கல்வி ஆர்வம் அதிகரித்தது,  பெற்றோரின் சுமையும் குறைக்கப் பட்டுள்ளதை அறிகிறோம். இந்நிலையில், இத்திட்டம் தற் போது ஆரம்பப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கே வழங்கப்பட்டு வருகிறது. மேல்நிலைப் பள்ளி  மாணவ, மாணவிகளும் பெரும் பாலும், ஏழை, எளிய குடும்பங் களைச் சேர்ந்தவர்களே, அதி காலை வீட்டு வேலைகள், தொலை தூர பயணங்கள் காரணமாக உண வின்றி பள்ளிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் கல்வி யில் கவனம் குறைந்து, உடல் நலக் குறைகள் ஏற்படவும் வாய்ப்புள் ளது. எனவே மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் காலை உணவு திட்டம் வழங்கப்படுவது மிக அவசியமானதாகும். அரசு  மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளி லும் காலை உணவு திட்டத்தை விரி வுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் தமிழகத் தில் கல்வி, ஆரோக்கியம், சமூக நீதி ஆகிய துறைகள் மேலும்  வளரும்.மாணவர்கள் ஆரோக்கிய மாகவும், மன உறுதியுடனும், கவ னக் குறைவின்றியும் கல்வி கற்கும்  சூழல் உருவாகும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கோவை சிங்காநல்லூர் மகாத்மா காந்தி நூற்றாண்டு  நினைவு நடுநிலைப்பள்ளியில் இத்திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் கண பதி கே.ராஜ்குமார், மாநகர மேயர் ரங்கநாயகி, மாநக ராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட  திரளானோர் பங்கேற்றனர். இத்திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் மாநகராட்சி ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளி கள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் 167 பள்ளிகளில் 21,242 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்க்கது.   ஈரோடு இதேபோன்று ஈரோடு ரயில் காலனி பகுதியில்  புனித ரீத்தா அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவியருடன் அமர்ந்து வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி காலை உணவருந்தினார். மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், மேயர் உள்ளிட்டோரும் இதில்  பங்கேற்றனர்.