சிறு, குறு தொழில்களை நசுக்கும் மின் கட்டண உயர்வு!
கோவை, ஜூலை 2- தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள 3.6 சதவிகித மின்கட்டண உயர்வை தமி ழக அரசு திரும்பப்பெற வேண்டும், என தமிழ்நாடு அனைத்து தொழில் முனை வோர் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள் ளனர். கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில், தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு செவ் வாயன்று நடைபெற்றது. அதில் அமைப் பின் தலைவர் முத்துரத்தினம், செயலா ளர் ஜெயபால் ஆகியோர் பேசுகை யில், திங்களன்று முதல் மின்கட்டண உயர்வை தமிழக மின்வாரியம் கொண்டு வந்திருப்பது என்பது தொழில் துறையினருக்கு அதிர்ச்சியளிக்கிறது. கடந்த காலங்களில் இருந்த 60 சதவிகி தம் அளவிற்கு கட்டண உயர்வை எதிர்த்து போராடி வந்த நிலையில், தற் போது கூடுதலாக 3.61 சதவிகித உயர்வு கொண்டு வந்துள்ளது. தொழில் முனைவோரை பொறுத்தவரை 3.6 சத விகிதம் தானே என பார்க்காமல் 63 சதவிகிதம் என பார்க்கும் வகையில் சூழல் இருக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலை நசுக்கும் வகையில் இந்த கட்டண உயர்வு உள்ளது. இந் தியாவில் அதிகமான நூற்பாலைகள் இருப்பது தமிழகத்தில்தான். இந்த மின் கட்டண உயர்வு குறித்து பல்வேறு அரசி யல் கட்சிகள், அரசாங்கத்திடம் முறை யிட்டும் உரிய தீர்வு கிடைக்கவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 சதவி கிதம் வரை மின் கட்டணம் குறைக்கப்பட் டுள்ளது. இதேபோல பல மாநிலங்க ளிலும் மின்கட்டணம் குறைந்துள்ளது. அப்படியிருக்கையில், தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை அதிகப்படுத்துவது சரியல்ல. சோலார் மின்சாரம் உற்பத்தி ஒரு யூனிட்க்கு ஒரு ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும். உயர்த்தப்பட்டுள் ள மின் கட்டணத்தை ரத்து செய்ய, தமி ழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகு திகளிலும் வேட்பாளர்களை நிறுத்து வோம், என்றனர்.