tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் மறியல்

மாற்றுத்திறனாளிகள் மறியல்

கோபி, செப்.9- வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் வட்டாட்சியர் அலுவலகம் முன் மறியலில் ஈடு பட முயன்ற போது, அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி படிப்படியாக கோரிக்கை கள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்த னர். வீட்டுமனை பட்டா மற்றும் வீடு இல் லாதவர்களுக்கு வீடு உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஈரோடு மாவட்டம், கோபி வட்டாட்சியர் அலு வலகம் முன்பு மறியல் அறிவித்தனர். அதன் படி செவ்வாயன்று சங்கத்தின் தாலுகா செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் மறி யலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.  வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் படிப்படியாக கோரிக் கைகள் நிறைவேற்றப்படும் என உறுதிய ளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இதில், மாவட்டத் தலைவர் டி.சாவித்திரி, செயலாளர் ப.மாரிமுத்து உள்ளிட்டோர் பங் கேற்றனர்.