tamilnadu

img

படைப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

படைப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

தருமபுரி, ஜூலை 30- தருமபுரி படைப்பாளர், பதிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்டப் படைப்பாளர், பதிப்பாளர் சங் கத்தின் ஆண்டுப் பொதுக்குழு கூட்டம், முத்து இல்லத் தில் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங் கத்தின் தலைவர் சி.சரவணன் தலைமை வகித்தார். செய லாளர் கூத்தப்பாடி மா.பழனி, பொருளாளர் நெ.த.அறிவு டைநம்பி ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். இதில், நடைபெறவுள்ள தருமபுரி புத்தகத் திருவிழா வில் மாவட்டப் படைப்பாளர்களின் நூல்கள் வெளியீட்டு விழா நடத்துவது, நூல் விற்பனை அரங்கு வைப் பது என்று முடிவு செய்யப்பட்டது. முடிவில், நா.நாக ராஜன் நன்றி கூறினார்.