tamilnadu

img

பெரியார் பல்கலைக்கழகத்தில் பசுமை வனம் உருவாக்கம்

பெரியார் பல்கலைக்கழகத்தில் பசுமை வனம் உருவாக்கம்

சேலம், ஜூலை 25- சேலம், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு அரசின் வனத்துறை இணைந்து, 4.5 ஏக்கர் பரப்பளவில் 500 மரக்கன்றுகளை நடவு செய்து ‘பெரியார்  பசுமை வனம்’ உருவாக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலத்திலுள்ள பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் மொத்தம் 7,700 மரங் கள் உள்ளன. மியாவாக்கி காடு வளர்ப் புத் திட்டத்தில் மட்டும் 4,400 மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், மாணவர்கள் பயன்பெறும் விதமாக மருத்துவக் குணங்கள் மிக்க மூலிகைத் தோட்டமும் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அழகுச் செடிகள் வளர்ப்புத் தோட்டம், பசுமைக் குடில், மண்புழு உரம் தயாரிப்புக் குடில் ஆகியனவும் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளன. குறிப்பாக, நூல கத்திற்கு அருகில் மூங்கில் தோட்டத் திற்கு நடுவே உயிர்வாயுப் பூங்கா ஒன் றும் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர் கள் தூய்மையான காற்றைச் சுவாசிப்ப தற்கு இப்பூங்கா பயனுள்ளதாக உள் ளது. இங்கு மாணவர்கள் அமர்ந்து நூல்களையும் செய்தித்தாள்களையும் வாசிப்பதற்கு ஏதுவாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது பெரியார் பல்கலைக்கழக மும், தமிழ்நாடு அரசின் வனத்துறையும் இணைந்து முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையம் அருகே 4.5 ஏக்கர் பரப்ப ளவில் 500 மரக்கன்றுகளை நடவு செய்து ‘பெரியார் பசுமை வனம்’ உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பல்கலைக்கழகப் பதி வாளர் வை.ராஜ் வரவேற்றார். துணை வேந்தர் நிர்வாகக்குழு உறுப்பினரான இரா.சுப்பிரமணி தலைமை வகித்து  பேசுகையில், இந்திய அளவில் காடு களை வளர்த்தல் 33 விழுக்காட்டுடன் கூடிய இலக்கை கொண்டுள்ளது. பெரி யார் பல்கலைக்கழகத்திலுள்ள 95 ஏக்கர் நிலப்பரப்பில் 22 விழுக்காட்டு நிலப்ப ரப்பு மரங்களால் நிரம்பியுள்ளது. தற் போது ‘பெரியார் பசுமை வனம்’ 4.5 ஏக் கர் நிலப்பரப்பில் 500 மரக்கன்றுகளால் அமையவுள்ளது. இதனால் 26 விழுக்கா டாக பல்கலைக்கழகத்தின் காடு வளர்ப்பு உயரவுள்ளது. மரங்களை வளர்ப்பதில் மாணவர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படின் பல்கலைக்கழக நிர்வா கம் அதை உடனடியாக நிறைவேற்றித் தரும், என்றார். மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங்க் ரவி மரக்கன்றுகளை நட்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இந் நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் பல் வேறு துறைகளைச் சார்ந்த துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள், அலுவல் நிலைப் பணியாளர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.