காமராஜர் சாலையை சீரமைக்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
கோவை, செப். 29- கோவை மாவட்டத்தில் போக்கு வரத்து மிகுந்த முக்கிய சாலை யான ஹோப் காலேஜ் முதல் சிங்கா நல்லூர் வரையிலான காமராஜர் சாலையை உடனடியாக விரிவுப டுத்தி செப்பனிடக் கோரி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்க ளன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் இந்தப் பிரதான சாலை பல ஆண்டுகளாகவே குண் டும் குழியுமாகக் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன், கடுமையான போக்குவரத்து நெரிசலும் உண் டாகி, வாகன ஓட்டிகள் தினமும் அவ திப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த சாலை யில் பயணித்த சிங்காநல்லூர் பகு தியை சேர்ந்த பெண் காவல் ஆய்வாளர் விபத்தில் சிக்கி பரி தாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகிற நிலையில, இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனக் கோரி, மார்க்சிஸ்ட் கட்சியி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் சிங்கை நகர செய லாளர் ஆர்.மூர்த்தி தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் கே.மனோகரன், கே. அஜய்குமார், வி.தெய்வேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. பாண்டியன், சி.ஜோதிமணி, தினேஷ் ராஜா, பீளமேடு நகர செய லாளர் ஏ. மேகநாதன், 24 ஆவது வட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாமன்ற உறுப்பினர் ஆர்.பூபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சாலையைச் சீர மைக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு இணை இயக்குனர் அழகு சுந்தரத்தை நேரில் சந்தித்து, காம ராஜர் சாலையை விரைந்து சீர மைக்கக் கோரி மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட இணை இயக்குனர் அழகுசுந்தரம், “ஓரிரு மாதங்களில் சாலைப் பணி கள் துவங்கி, விரைவில் முடிக்கப் படும்,” என உறுதியளித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் தெரிவித்தனர்.
