tamilnadu

img

மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி சிபிஎம் போராட்டம்

மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி சிபிஎம் போராட்டம்

சேலம், அக்.11- சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரே இடத்தில் செயல்பட்டு வரும் ஐந்து மதுக்கடைகளை அப்பு றப்படுத்த வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகரக் குழு சார்பில் பூட்டுப் போடும் போராட் டம் சனியன்று நடைபெற்றது.  சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரே இடத்தில் ஐந்து மதுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.  இந்தக் கடைகளின் எண்ணிக்கை யைக் குறைப்பதாக அதிகாரிகள் பல முறை உறுதியளித்தும், இதுவரை  எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்தப் பிரச்னைக்காக சிபிஎம் மற்றும் வாலிபர் சங்கம், மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கடந்த 5 மாதங்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றன. மூன்று வரு டங்களுக்கும் மேலாக இந்தப் போராட்டங்களில் சிபிஎம் தலை யிட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் அதிகாரி கள் உறுதியளிக்கின்றனர். ஆனால்,  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவ தில்லை. நான்காவது முறையாக சனியன்று மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் முயற்சியில் சிபிஎம் மற்றும் வாலிபர், மாணவர், மாதர்  சங்கத்தினர் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சேலம் வடக்கு  மாநகரச் செயலாளர் என்.பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தின்போது, பூட்டுப் போட முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பர பரப்பு ஏற்பட்டது. இப்போராட்டத்தில், சிபிஎம் மாந கரக் குழு உறுப்பினர்கள் எஸ்.செல்ல பாண்டியன், ஆர்.கே.சங்கர், எஸ்.சசி குமார், எஸ்.டேனியல் மற்றும் வாலி பர் சங்க மாநகரச் செயலாளர் டி. மனோகரன், மாதர் சங்க மாநகர அமைப்பாளர் ஆர்.ரம்யா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.