கவுண்டம்பாளையத்தில் திறந்து கிடக்கும் கிணறு மூடி அமைக்க சிபிஎம் கோரிக்கை
அவிநாசி, அக்.8- அவிநாசி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் 70 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பாதுகாப்பு இல் லாமல் கிணறு திறந்தநிலையில் உள்ளது. ஏதேனும் அசம்பா விதம் நடைபெறுவதற்குள் கிணற்றுக்கு மேலே பாதுகாப்பு இரும்பு மூடி அமைக்க வேண்டும். சாக்கடை கால்வாயை அக லப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கோரிக் கைகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் கவுண் டம்பாளையம் மாதர் கிளை சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதேபோல பெரிய கருணைபாளையம் முதல் சின்ன கருணைபாளையம் வரை உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள் ளாகி வருகின்றனர். இதனை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் பெரிய கருணைபாளையம் கிளை சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் விரைவில் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வ ரமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தங்கமணி, தேவி, வேலுசாமி, தினகரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சாமியப்பன், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் கௌரிமணி, ஒன்றியத் தலைவர் சித்ரா உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.