tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

அரசியல் கட்சியினரை அவமானப்படுத்துவதா மாவட்ட நிர்வாகத்திற்கு சிபிஎம் கண்டனம்

கோவை, செப். 25- அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தை கண்துடைப்பாக நடத்திய மாவட்ட நிர்வாகத்தின் செய லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து சிபிஎம் மாவட்டச்செயலாளர் சி.பத்மநாபன்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அனைத்துக் கட்சி கூட்டம்  வியாழனன்று நடைபெற்றது. இதில், அங்கீகரிக்கப்பட்ட அகில இந்திய - மாநில கட்சிகள் 12 மற்றும் பதிவு செய் யப்பட்ட அமைப்புகளுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  அதன்படி 24 பேர் பங்கேற்க வேண்டிய கூட்டத்தில், 200க்கும்  மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்தார்கள். இதில், மாவட்டம் முழு வதும் வரும் காலத்தில் அரசியல் கட்சிகள் நடத்தக்கூடிய பேரணி பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணா விரதம், தெருமுனை கூட்டம் போன்றவற்றை நடத்துவ தற்கான ஆலோசனைக் கூட்டம் என்று அறிவிக்கப்பட் டது. அப்போது ஆட்சித் தலைவரின் ஆலோசனையாக காணொளியில், காவல் நிலைய வாரியாக. விபரங்களை காட்சி படுத்தினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் மாவட்டச்செயலாளர் சி.பத்மநாபன், செயற்குழு உறுப்பினர்கள் கே.அஜய்குமார், கே.எஸ்.கனகராஜ், வி. இராமமூர்த்தி ஆகியோர் பங்கெடுத்தோம். இந்த ஆலோ சனைக் கூட்டத்தில், நீங்கள் எந்த விவரத்தையும் எங்களிடத் தில் அளிக்காமல் இவ்வாறு தொலைக்காட்சியில் காட்சிப்ப டுத்தி கருத்துக் கேட்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. அரசியல் கட்சிகளை அவமானப்படுத்துகிற செயலாக நாங்கள் பார்க்கிறோம் என்று சொல்லி வெளியேறினோம். ஆளுகிற கட்சிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை,  என்கிற எதார்த்த நிலைகளில் இருந்து கண்துடைப்புக்காக, ஒரு கூட்டத்தை நடத்தி, எந்தவிதமான கருத்து பரிமாற்றத் துக்கும் இடம் அளிக்காமல், ஜனநாயக மாண்புகளுக்கும் மதிப்பளிக்காத மாவட்ட நிர்வாகத்தின் செயலை கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அரசியல் கட்சி  பிரதிநிதிகளுடைய எண்ணிக்கையை தீர்மானித்து அர்த்தமுள்ள கருத்துக் கேட்பை நடத்த வேண்டும் என அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனியன் தொழிலாளர்களுக்கு கூடுதல் போனஸ்: சிஐடியு கடிதம்

திருப்பூர், செப்.25- திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தில் உறுப்பினராக உள்ள கம்பெனி களில் வேலை செய்யும் தொழிலாளர் களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகையை அக்.5ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று சிஐடியு கடிதம் அனுப்பியுள்ளது. பனியன் அன்ட் பொதுத்தொழி லாளர் சங்க (சிஐடியு) பொதுச்செய லாளர் ஜி.சம்பத் வியாழனன்று திருப் பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகி களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, பனியன் தொழி லாளர்கள் உள்ளிட்ட மக்கள் அன்றா டம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்களின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது. இதனால் குடும்பத் தின் அத்தியாவசியத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடி யாத அளவுக்கு பனியன் தொழிலா ளர்கள் நெருக்கடியைச் சந்தித்து வரு கின்றனர். எனவே, பண்டிகை கால  தேவைகளை ஓரளவாவது நிறை வேற்றக்கூடிய முறையில், கடந்த  ஆண்டைக் காட்டிலும் கூடுதலான போனஸ் தொகையை கணக்கிட்டு அக்.5 ஆம் தேதிக்குள் வழங்க  வேண்டும். மேலும், பீஸ் ரேட் மற் றும் ஒப்பந்த முறையில் வேலை செய் யும் தொழிலாளர்களுக்கும் போனஸ் சட்டப்படி சதவீத அடிப்படையில் கணக்கிட்டு, போனஸ் வழங்க வேண் டும். அத்தகைய அடிப்படையில் போனஸ் தொகை வழங்கப்படுவதை முதன்மை வேலை அளிப்பவரான கம்பெனி நிர்வாகங்கள் உறுதிப் படுத்த ஏற்றுமதியாளர் சங்க உறுப் பினர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையில் எரிக்கப்பட்ட மருந்துகள்

கோவை, செப்.25- மேட்டுப்பாளையம் நகரப்  பகுதியில் குவியல் குவிய லாக மருந்து மாத்திரைகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியது. கோவை, மேட்டுப் பாளையம் நகராட்சிக்குட் பட்ட பங்களா மேடு என்னும் பகுதி நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இந்த பங் களாமேடு பகுதி சாலை யோரம் குவியல் குவியலாக  மருந்து, மாத்திரைகள் கொட்டி சிலர் அதற்கு தீ  வைத்து விட்டு சென்றுள்ள னர்.  இதில் பல மருந்துகள் பாதி எரிந்தும், எரியாமலும் கிடந்தது. காலாவதியான மருந்து, மாத்திரைகள், டானிக்குகள் மற்றும் பயன் படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்தாமல் அதனை பொது இடத்தில்  கொட்டி எரிக்க முயன்றுள் ளது குறித்து உரிய விசா ரணை நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை அப்பகுதியினர் எழுப்பினர்.

வி