tamilnadu

img

கொடுமணல் அகழாய்வு தளத்தில் ஆட்சியர் ஆய்வு

கொடுமணல் அகழாய்வு தளத்தில் ஆட்சியர் ஆய்வு

ஈரோடு, ஆக.17- கொடுமணல் அகழாய்வு தளத்தில் மாவட்ட ஆட்சியர் கந்த சாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், நொய்யல் ஆற் றின் வடகரையில் கொடுமணல் அமைந்துள்ளது. சங்க இலக் கியமான பதிற்றுப்பத்தில் கொடுமணம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. பொதுவாக கி.மு. 4 லிருந்து 5 ஆம் நூற் றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. கொடுமணலில் மக்கள் வாழ்ந்ததற்கான வாழ்வியல் இடத்தின் எச்சங்க ளும், இறந்தவர்களை புதைக்க பயன்படுத்தும் ஈமக்காட்டு பகுதியின் எச்சங்களும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத் தில் அதிகளவில் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை யோடுகள் இங்கு கிடைக்கப்பெறுகின்றன. பானையோட்டு கீறல்களிலிருந்து தமிழ் பிராமி ஏழுத்து வளர்ச்சிக்கான ஆதா ரங்கள் உள்ளன. கொடுமணல் அகழாய்வு தளத்தில் நொய் யல் ஆற்றின் கரையில் 7 இரும்பு உருக்கு உலை கலன்க ளும், அதிகளவில் இரும்பு உற்பத்தி செய்யப்பட்டு இரும்பு தயாரிப்பின் முக்கிய இடமாக திகழ்ந்துள்ளது. குவார்ட்ஸ் என்று அறியப்படும் படிக கல்லினால் ஆன மணிகள் இத் தளத்தில் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன. செம்பழுப்பு  நிறப் பூச்சு கொண்ட மட்கலன்கள், தமிழி பொறிப்பு பெற்ற  மட்பாண்டச் சிதறல்கள், சங்கினால் தயாரிக்கப்பட்ட பல்வேறு  விதமான கலைப் பொருட்கள், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த  நெடுநிலை நடுகற்கள், கற்குவைகள், முதுமக்கள் தாழிகள்  போன்ற தொல்லியல் எச்சங்கள் இங்கு கண்டறியப்பட்டு முக்கிய அகழாய்வு தளமாக அறியப்படுகிறது. அத்தகைய தொல்பொருள் ஆய்வு தளத்திற்கு ஞாயிறன்று சென்ற  மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி அங்கிருந்த கற்பதுக்கைகள், நெடுநிலை நடுகற்கள், கற்குவைகள் ஆகியவற்றை பார்வை யிட்டார். பெருந்துறை வட்டாட்சியர் ஜெகநாதன் உடனி ருந்தார்.