tamilnadu

img

தருமபுரி புத்தகத் திருவிழா ஏற்பாடு குறித்து ஆட்சியர் ஆய்வு

தருமபுரி புத்தகத் திருவிழா ஏற்பாடு குறித்து ஆட்சியர் ஆய்வு

தருமபுரி, செப்.21- தருமபுரியில் செப்.26 இல் துவங்கவுள்ள  7 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா முன்னேற் பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ரெ.சதீஷ் ஆய்வு செய்தார். 7 ஆம் ஆண்டு தருமபுரி புத்தகத் திரு விழாவை மாவட்ட நிர்வாகம், மாவட்ட நூல கத்துறை, தகடூர் புத்தகப்பேரவை, பாரதி புத் தகாலயம் இணைந்து நடத்துகின்றன. செப்.26 முதல் அக்.5 ஆம் தேதி வரை தருமபுரி  சுந்தரராஜராவ் திருமண மண்டபத்தில் நடை பெறவுள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த  விழாவை, வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல் வம் தொடங்கி வைக்கவுள்ளார். நாள்தோறும் புத்தகம் தொடர்பான நிகழ்வுகள் மாலை 5  மணி முதல் கலைநிகழ்ச்சிகள், மாலை 6 மணி  முதல் சிறந்த கருத்தாளர்கள் பங்கேற்று உரை யாற்றவுள்ளனர். இந்நிலையில், புத்தகத் திரு விழா நடைபெற உள்ள இடத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் ஞாயிறன்று ஆய்வு செய்தார். தருமபுரி வட்டாட்சியர் செளகத்அலி, தகடூர் புத்தகப் பேரவை தலை வர் இரா.சிசுபாலன், செயலாளர் இரா.செந் தில், ஒருங்கிணைப்பாளர் இ.தங்கமணி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.