tamilnadu

img

போக்சோ வழக்கு - 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை

கோவையில் கடந்த 2019-ஆம் ஆண்டு 16 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை சீர நாயக்கன்பாளையம் ஐஸ்வர்யா நகர் பகுதியில் 2019 ஆம் ஆண்டு பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவி, தனது ஆண் நண்பருடன் இருந்தபோது, மணிகண்டன், கார்த்திக், ஆட்டோ மணிகண்டன், ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் ஆகிய 7 பேர் கொண்ட கும்பல் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது. மாணவியின் பாட்டி அளித்த புகாரின் அடிப்படையில், கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் பல மாதங்களாக நடந்த விசாரணையில், குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. குற்றவாளிகள் ஆட்டோ மணிகண்டன் (30), பப்ஸ் கார்த்திக் (25), மணிகண்டன் (30) ஆகிய மூவருக்கும் சாகும் வரையில் ஆயுள் தண்டனையும், ராகுல் (21), பிரகாஷ் (22), நாராயண மூர்த்தி (30), கார்த்திகேயன் (28) ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.