சிஐடியு தருமபுரி மாவட்ட மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு
தருமபுரி, ஜூலை 20- சிஐடியு தருமபுரி மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்துவ தற்கான வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. சிஐடியு தருமபுரி மாவட்ட 13 ஆவது மாநாடு, செப்.12,13 ஆகிய தேதிகளில் பாப்பாரப்பட்டியில் நடைபெற உள்ளது. செப்.12 ஆம் தேதி பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற வுள்ளது. இந்நிலையில், மாநாட்டிற்கான வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம், சிஐடியு அலுவலகத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. மாநிலச் செயலாளர் சி.நாகராசன் தலைமை வகித் தார். மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் சிறப்புரை யாற்றினார். இதில் மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, பொரு ளாளர் சி.கலாவதி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வே.விஸ்வநாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட் டச் செயலாளர் ஏ.சேகர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, வரவேற்புக்குழு தலைவராக வே.விஸ் வநாதன், செயலாளராக பி.கிருஷ்ணன், பொருளாளராக சி. கலாவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.