பல்லகவுண்டம்பாளையத்தில் சிஐடியு எம்.கே.பாந்தே நூற்றாண்டு பேரவை
திருப்பூர், அக். 4 - திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள சிஐடியு இன்ஜினியரிங் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் வெள்ளியன்று சிஐடியு முன்னாள் அகில இந்தியப் பொதுச் செயலாளர் எம்.கே.பாந்தே நூற்றாண்டு விழா சிறப்புப் பேர வை கூட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு நிர்வாகி எச். ஶ்ரீராம் விளக்கவுரையாற்றினார்.இக்கூட்டத்தில் இன்ஜினிய ரிங் சங்க நிர்வாகிகள் உள்பட 35 பேர் பங்கேற்றனர்.
