மாணவிகளை ஏற்றிச் செல்லாத பேருந்துகள்
திருப்பூர், ஆக.14- பள்ளி மாணவிகளை அரசு பேருந்துகள் ஏற்றிச் செல்லாத சம்பவம் குறித்து ஜெய்வா பாய் பள்ளி மேலாண்மைக்குழு கவலை தெரி வித்துள்ளது. திருப்பூர் ஜெய்வாபாய் நகரவைப் பெண் கள் மேல்நிலைப்பள்ளியின் மேலாண்மைக் குழு சார்பில் திருப்பூர் கோட்டாட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது: இப்பள்ளியில் தற்போது 5400 மாணவி கள் படித்து வருகின்றனர். மொத்தம் 120 வகுப்பறைகள் 11 கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. பள்ளியின் பிரதான கட்டிடத் தில் உள்ள திறந்தவெளியில் 11 தென்னை மரங்கள் உள்ளன. இங்கு மாணவிகள் தேர்வு எழுதுவதற்காகவும், படிப்பதற்காகவும் மதிய வேளையிலும் மரத்தடியில் அமர்கின்ற னர். சில நேரங்களில் தென்னை மரங்களில் இருந்து தென்னை மட்டைகளும், காய்களும் உதிர்ந்து விழுந்து மாணவிகளுக்கு பாது காப்பற்ற சூழ்நிலை உள்ளது. எனவே இந்த தென்னை மரங்களை அகற்றித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து பள்ளி மேலாண்மைக் குழு ஒருங்கிணைப்பாளரான, தலைமை ஆசிரி யர் எம்.ஸ்டெல்லா அமலோற்பவமேரியிடம் கேட்டபோது, தென்னை மரங்களும் பிள்ளை கள் தான் என்று கருதி, அவற்றை அகற்றக் கூடாது என்று கடந்த மூன்றாண்டுகளாக மட்டைகள், காய்கள் விழுவதில் இருந்து பாதுகாப்பதற்கு பல்வேறு ஏற்பாடுகளை முயற்சி செய்தோம். எனினும் எதுவும் பலன ளிக்கவில்லை. அதேசமயம் மாணவிகள் பாதுகாப்பு முக்கியம் என்பதால் வேறு வழி யில்லாமல் இந்த மரங்களை அகற்றுமாறு கேட்டிருக்கிறோம். அதேசமயம் இந்த மரங் களை வேரோடு பெயர்த்து எடுத்துக் கொடுத் தால் இதே பள்ளி வளாகத்தில் பாதிப்பில் லாத வேறு இடத்தில் வைத்துக் கொள்வோம். அதற்கும் முயற்சிப்போம், என்றார்.
மாணவிகளை ஏற்றிச் செல்லாத அரசுப் பேருந்துகள்:
இதேபோன்று, 5400 மாணவிகள் படித்து வரும் ஜெய்வாபாய் பள்ளிக்கு ஏறத்தாழ 3000 மாணவிகள் அரசுப் பேருந்துகளில்தான் வரு கின்றனர். பெரும்பாலும் ஏழை, எளிய பனி யன் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகள் திருப் பூர் புதிய பேருந்து நிலையம், வீரபாண்டி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்க ளில் இருந்து பள்ளிக்கு வருகின்றனர். மாண விகள் இருக்கும் இடத்தில் பேருந்துகளை நிறுத்தாமலும், அவர்களை ஏற்றி வராமலும் செல்கின்றனர். மேலும் சில பேருந்துகளில் மாணவிகள் ஏறி வரும்போது அவர்களைத் திட்டுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களால் பெண் குழந்தைகளின் கல்வி வாய்ப்பு பாதிக் கப்படும். எனவே பள்ளிக்கு வரும் மாணவி களை பேருந்துகளை நிறுத்தி ஏற்றி வருவ தற்கு அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்க ளிடம் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.