tamilnadu

img

ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்தம்

ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் வேலை நிறுத்தம்

தருமபுரி, ஜூலை 13- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்தின் அளவைப் பொறுத்து, பரி சல் இயக்க அனுமதி அளிக்க வேண் டும் என வலியுறுத்தி பரிசல் ஓட்டி கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள் ளனர். பிரசித்திப்பெற்ற சுற்றுலாத் தல மான தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல்லுக்கு தமிழ்நாடு மட் டுமின்றி, கேரளம், கர்நாடகா, ஆந் திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந் தும் ஏராளமான சுற்றுலாப் பயணி கள் வந்து செல்வது வழக்கம். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பருவமழை பெய்து  வந்ததன் காரணமாக கர்நாடகா விலுள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதையடுத்து கடந்த சில நாட்க ளாக காவிரி ஆற்றில் விநாடிக்கு 90  ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இத னால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகளுக்கு அருவிகளில் குளிப் பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் கள் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித் திருந்தது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் கடந்த 22 நாட் களுக்குப் பிறகு காவிரி ஆற்றில் பரி சல் இயக்குவதற்கு மாவட்ட ஆட்சி யர் ரெ.சதீஸ் அனுமதி அளித்திருந் தார். இந்நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தின் அளவை பொறுத்தவாறு மாமரத் துக்கடவு பரிசல் துறையில் 1,000 முதல் 8,000 கனஅடி வரை, ஊட்ட மலை பரிசல் துறையில் இருந்து  8,000 முதல் 30,000 கனஅடி வரை,  சின்னாறு பரிசல் துறையில் இருந்து  30,000 முதல் 50,000 கனஅடி வரை நீர் வரத்து காலங்களில் பரிசல்கள் இயக்க அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அனுமதி அளிக்க வேண்டும். காவிரி ஆற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது  அதிகபட்சமாக மூன்று மாதத்திற்கு  மேலாக தடை விதிக்கப்படுவதால், ஒகேனக்கல்லில் உள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், சிறு  வியாபாரிகள், தங்கும் விடுதிகள்  என சுமார் 5,000 மேற்பட்ட குடும்பத் தினரும், 2000 மேற்பட்ட தொழிலா ளர்கள் பாதிக்கப்படுகின்றனர். தடைக்காலங்களில் நிவாரணம் வழங்க வேண்டும். அதிக நீர்வ ரத்து காலங்களில் சுற்றுலாப் பய ணிகளுக்கு தடை விதிக்காமல் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரை காண்பதற் காக ரூ.18 கோடியில் சுற்றுலா  மேம்பாட்டு நிதியில் கட்டப்பட் டுள்ள நடைபாதை, மசாஜ் செய் யும் இடம் ஆகியவற்றினை பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண் டும். ஆண்டுக்கு அரசுக்கு ரூ.2 கோடி  வருவாய் ஈட்டித் தரும் ஒகேனக்கல்  தொழிலாளர்களின் கோரிக் கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கும் 416 பரிசல் ஓட்டிகள் அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், பரிசல் இயக்க மறுத்து  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பென் னாகரம் வட்டார வளர்ச்சி அலுவ லர் சக்திவேல், வட்டாட்சியர் பிர சன்ன மூர்த்தி, ஒகேனக்கல் காவல்  ஆய்வாளர் முரளி ஆகியோர் பரி சல் ஓட்டிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து நடவ டிக்கை எடுப்பதாக தெரிவித்த நிலையில், உடன்பாடு ஏற்படாமல் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஞாயிறு விடுமுறையில் ஒகேனக்கல் வந்தி ருந்த சுற்றுலாப் பயணிகள் காவிரி  ஆற்றில் பரிசல் பயணம் மேற் கொள்வதற்காக சின்னாறு பரிசல்  துறையில் குவிந்த நிலையில்,  பரிசல் ஓட்டிகள் வேலைநிறுத்தத் தில் ஈடுபட்டுள்ளதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற னர்.

ஜூலை 15இல் (நாளை) சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மாதக்கணக்கில் மூடப்பட்டுள்ள ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை மீண்டும் இயக்க வேண்டும். நீர்வரத்து குறையும் போதும் சுற்றுலாத்  தலத்தை இயக்குவதை தள்ளிப்போடாக்கூடாது. சுற்றுலாவை நம்பி யுள்ள படகு, சமையல், விடுதிகள், சிறு குறு மற்றும் சாலையோர வியா பாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். மழை வெள்ள  காலங்களில் உபரிநீர் செல்லும் காலம் வரை சுற்றுலாவை நம்பி உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதிகாரிகளின் விருப்பத்திற்கு ஏற்ப சுற்றுலாத் தலத்தை திறப்பது மூடுவது என்ற நடை முறையை கைவிட வேண்டும். தொழிலாளர்கள் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வெள்ளபெருக்கு காலத்தில் சுற்றுலா பயணி களை அனுமதிப்பதற்காண நிரந்தர தீர்வு காணவேண்டும். மீன்பிடித்  தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனே நீக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பென்னாகரம் மேற்கு ஒன்றியக்குழு சார்பில் ஜூலை  15 ஆம் தேதி (நாளை) ஒகேனக்கலில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள் ளது.