tamilnadu

img

கோவை குற்றாலம் செல்லத் தடை

கோவை குற்றாலம் செல்லத் தடை

கோவை, ஆக.17- கோவை குற்றாலம் அருவியில் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, அரு விக்கு செல்ல வனத்துறையினர் தற்காலிக மாக தடை விதித்துள்ளனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந் துள்ளதால், அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழ கத்தில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறி வித்திருந்தது. இதில் கோவை, நீலகிரி  மாவட்டங்களில் ஞாயிறன்று கனமழைக் கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சனியன்று இரவிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் பெய்து வரும் தொடர் மழையால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி கோவை  குற்றாலம் அருவியில் குளிக்க பொதுமக்கள்  மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான மக்கள் குற்றாலம் அருவியில் குளிக்க வர வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கோவை குற்றாலம் அருவி தற்காலிக மாக மூடப்படுவதாகவும், மீண்டும் சீரான  நீர்வரத்து வந்த பின்னர் அருவி திறக்கப்படும்  என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.